‘ஓய்’ என்று ஏன் தலைப்பு வைச்சோம் தெரியுமா? இயக்குநர் விளக்கம் + ஆல்பம்

‘ஓய்’ என்று ஏன் தலைப்பு  வைச்சோம் தெரியுமா? இயக்குநர் விளக்கம் + ஆல்பம்

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஓய்’ படத்தை அறிமுக இயக்குநர் பிரான்சிஸ் மார்க் கஸ் இயக்குகிறார். இவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்தில் ஹீரோவாக கீதன் பிரிட்டோ நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘குறையொன்றும் இல்லை’, ‘ஆகோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக புதுமுகம் ஈசா நடித்துள்ளார்.


அது என்ன ‘ஓய்’ என்று தலைப்பு குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “நாம் ஒருவரை ஓய் என்று அழைப்போம். இது ஒவ்வொரு சமூக மக்களிடையே மாறுபடும். ஹீரோவைப் பார்த்து ஒரு இடத்தில் ஹீரோயின் இப்படி அழைக்கிறார், ஆனால் அதற்கு அவர் திரும்பிப் பார்க்க வில்லை, இதனால் ஏற்படும் விளைவுகள் தான் திரைக்கதை. ஓவரால் படம் பற்றி சொல்லும்போது ஓய் என்ற வார்த் தைக்கு ஜோடிப்பு என்ற அர்த்தம் இருக்கிறது. அதன்படி, நாயகன் இடத்தில் நாயகி ஒரு சம்பவத்தை ஜோடிக்கிறார், அதனால் நடக்கப் போகும் விஷயங்கள் தான் படத்தின் கதை.

இப்படி கதை குறித்து சொல்லியவரிடம் இளையராஜா இசை குறித்து கேட்ட போது, “படத்தின் கதை களம் கிராமம். இதில் சிலம்பம் கலையைப் பற்றி சொல்லியிருக்கிறோம். இது படத்தின் முக்கிய ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. எனவே இந்த படத்திற்கு இளையராஜா சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். இன்று பல இளம் இசையமைப் பாளர்கள், கிராமத்து பாடல்கள் கொடுத் தாலும், அவற்றில் எங்கேயோ ஒரு இடத்தில் டிஜிட்டல் தொழில்ண்டுபம் தெரிந்து விடுகிறது. அனால், ராஜாசாரின் பாடலில் அந்த ஒரிஜினல் கிராமத்து இசை இருக்கும், எனவே தான் அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி, அவர் இசையமைப்பில் பல படங்களை தயாரித்துள்ள சங்கிலி முருகன் சாரிடம் சொன்னேன், அவர் எனக்கு ராஜா சாரிடம் நேரம் வாங்கிக்கொடுத்தார். அதன்படி கதை பிடித்திருந்தால் இசையமைப்பேன், என்று கூறி என்னிடம் கதை கேட்டவர், உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.என்னை ஒரு அறிமுக இயக்குநர் என்று நினைக்காமல், நான் எந்த மாதிரி யான பாடல்கள் கேட்டேனோ அதன்படி எனக்கு பாடல்களை கொடுத்த ராஜாசாரிடம் இணைந்து பணி புரிந்தது நல்ல அன்பவமாக இருந்தது, என்றார்.


யுகராஜ்.எச் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விவேகா மற்றும் ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். மணிமொழியன் கலைத் துறையை கவனிக்க, மணி படத்தொகுப்பு செய்கிறார். என்.பாஸ்கரன் வசனம் எழுதியுள்ளார்.

Related Posts