ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு எலட்க்ரிகல் டெக்னீஷியன் வேணுமாம்
ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு மின் தொழில் நுட்பம் ( எலட்க்ரிகல் டெக்னீஷியன்) படித்துள்ளவர்கள் தேவைப்படுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்திற்கு, டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் மேலும் டவர் (Tower) மற்றும் போல் (Pole) தொடர்பில் அனுபவம் உள்ள எலக்ட்ரிகல் டெக்னீஷியன்கள் மின் தொழில் நுட்பம் படித்து 21 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தகுந்த ஊதியமும், இலவச தங்குமிடம், மருத்துவம் மற்றும் காப்பீடு போன்றவை வேலையளிப்போரால் வழங்கப்படும்.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களின், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பும்படி கூறியுள்ளது.
மேலும் விபரங்களை அறிய 044-22505886/22502267/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்களையோ அல்லது omcmanpower.com வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளது


