” ஐ” திரைப்பட ஆடியோ வெளியீடு ஆல்பம் + டீசர்
விக்ரம்-எமி ஜாக்சன் நடித்து ஷங்கர் டைரக்டு செய்துள்ள படம், ஐ. இந்த படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றிரவு நடந்தது. பாடல்களை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். பிரமாண்டமாக பேசப்ப் ட்ட ஐ படத்தின் விழாவுக்கு, எதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டாரோ அதை படக்குழுவினர் வீணடித்துவிட்டனர் என்றும் சுமார் 6 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி 8 மணிக்கு தான் துவங்கியதாலும் மேலும் நிகழ்ச்சிக்கான நிரலும் சரிவர அமைக்கப்படாததாலும் படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே அர்னால்டு கிளம்பிவிட்டார் என்று மீடியாவினர் வருத்தமாக தெரிவித்தனர்.
ஆச்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘ஐ’ வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புது டீசரைப் பார்க்க க்ளிக்:::
www.youtube.com/embed/pzTHmcXfeug”
முன்னதாக மதியம் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்துப் பேசினார். அதுக் குறித்து,சென்னையில் இன்று இரவு (சினிமா) நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்வதற்கு முன்னதாகக் கிடைக்கப்பெற்ற, தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவுடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு அற்புதமாக இருந்தது. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது மாநிலத்தில் அவரது சாதனை மற்றும் சந்திக்கும் சவால்கள் பற்றி கேட்டறிந்தேன். இதுதான் ஒரு நடிகராகவும், முன்னாள் கவர்னராகவும் இருந்தனால் கிடைத்த அனுகூலமாகக் கருதுகிறேன். ” என்று அர்னால்டு தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மாலையில் நடந்த டீசர் வெளியீடுவிழாவில் ஐ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் பிரமாண்ட திரையில் வெளியிடப்பட்டது. ஐ படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ரஹ்மான் உடன் பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோர் ஐ படத்தின் பாடல்கள் பாடி அசத்தினர்.அடுத்த நிகழ்ச்சியாக 11 ஆணழகன்கள் மேடையில் தோன்றி இசைக்கேற்ப தங்கள் உடல் வலிமையை காட்டினார்கள். அதை பார்த்து ரசித்த அர்னால்டு எழுந்து நின்று கைதட்டினார்.ஆணழகன்களுடனும் கைக்குலுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விழாவில் பேசிய ரஜினி பேசுகையில், “ஷங்கர் ஒரு வித்தியாசமான இயக்குனர். ஹாலிவுட் தரம் கொண்ட படங்களை தமிழ் மண்ணை சேர்ந்தவர்களாலும் இயக்க முடியும் என்று உலகிற்கு நிரூபித்து காட்டுபவர். அந்தளவுக்கு கடும் உழைப்பை கொடுத்து ஹாலிவுட் திரை உலகை தமிழ் சினிமா உலகை நோக்கி திரும்பவைத்துள்ளார்” என்று ரஜினி பாராட்டினார்.
பின்னர் அர்னால்டு ”ஆணழகன்களின் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன். அவர்கள் தங்கள் உடற்கட்டை நன்றாக வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை போல் ஆணழகனாக இருந்து கதாநாயகனா உயர்ந்தவன். இன்று நான் வந்தது ஐ பட விழாவில் கலந்துகொள்வதற்காக மட்டும் அல்ல. டைரக்டர் ஷங்கர் உங்களிடம் நான் வேலைகேட்டு வந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். என்னை வைத்து நீங்கள் எப்போது படம் எடுக்க போகிறீர்கள்.நான் ஷங்கர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். கெனன் தி கிங் என்ற படத்தை என்னை வைத்து எடுக்க தயாரா?. சென்னை சென்னை மிக அழகான நகரம்.இதற்கு முன்பு நான் இந்தியாவுக்கு ஏற்கனவே வந்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதன்முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன்.சென்னை நகர மக்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது. அதனால் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்.என்று அர்னால்டு பேசினார்.
.


























