ஐ.ஐ.டி எஜூகேசன் ஃபீஸ் சும்மா எகிறிடுச்சில்லே!

ஐ.ஐ.டி எஜூகேசன்  ஃபீஸ்  சும்மா எகிறிடுச்சில்லே!

இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) ஆண்டு கல்வி கட்டணத்தை 90,000 ரூபாயிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐ.ஐ.டி துணைக்குழு கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலை யில் ஐ.ஐ.டி நிறுவனத்தில் கல்வி கட்டணத்தை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த பரிசீலனை செய்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
iit apr 7
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டண சலுகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள எஸ்.சி., எஸ்.டி., தலித்துகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முழு கட்டண சலுகை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., தலித்துகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முழு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts