ஐகோர்ட் முன்னாள் ஜட்ஜ் கர்ணன் கைது – சுப்ரீம் கோர்ட் கறார்

ஐகோர்ட் முன்னாள் ஜட்ஜ் கர்ணன் கைது – சுப்ரீம் கோர்ட் கறார்

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய ஓய்வுபெற்று, தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டார். 43 நாட்கள் தலைமறைவாக இருந்த இவர் மீதான பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில் கர்ணன் மீதான வழக்கில் இன்று ஆஜரான அவரது வழக்கறிஞர், எந்த வித விசாரணையும் நடத்தப்படாமல் கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதில் பல்வேறு உரிமை மீறல்கள் நடந்துள்ளது. இதனால் அவரை விடுவிக்க வேண்டும் என பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அவர் பேச கூட அனுமதிக்கப்படவில்லை என கர்ணன் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

கர்ணன் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கைகளை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பெஞ்ச், கர்ணனை விடுவிக்க முடியாது. கர்ணன் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கோர்ட் விடுமுறை முடிந்து முழுவதுமாக செயல்பாடுகள் துவங்கிய பிறகே இது குறித்து பேச முடியும் என தெரிவித்துள்ளது.