32°C
விளம்பரம்
Advertisement

’ஏர் இந்தியா’ – சிறந்த விமான நிறுவன விருதை பெற்று சாதனை!

admin சேலம் Published: April 1, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




லண்டனைச் சேர்ந்த நிறுவனம் 2014ம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனத்திற்கான சர்வதேச விருதை “ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. “ஏர் இந்தியா’ நிறுவனம், 32 சர்தேச விமான நிலையங்களுக்கும், 62 உள்நாட்டு விமான நிலையங்களுக்கும், வடகிழக்கு பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களான லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்து..
air india
விமான பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா’ சார்பில், பெரிய ரக விமானங்கள், சொகுசு மற்றும் நவீன ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில்தான் ஏர் இந்தியா’வின் இந்த சேவையை பாராட்டி லண்டனில் உள்ள “ஏஷியன் பிசினஸ் பப்ளிகேஷன்ஸ்’ (ஏ.பி.சி.எல்.,) நிறுவனம், 2014ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிறுவனத்திற்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை லண்டன் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா நிறுவன மண்டல மேலாளர் கைலாஷ் சிங்கிடம் பிரிட்டன் நாட்டின் குற்றதடுப்புபிரிவு அமைச்சர், நார்மன் பேக்கர் வழங்கினார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்