எல்லோரும் விமானத்தில் பறக்கலாம்: மத்திய அரசு புது பிளான் ரெடி!
இன்றைக்கும் நம்மில் பலருக்கும் விமானப் பயணம் என்பதே கொஞ்சம் சொகுசுதான். அந்த நிலைமையில்தான் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். அதனாலேயே எகானமி வகுப்பு மட்டுமே கொண்டிருக்கும் விமான நிறுவனங்கள் பல உள்ளன. அனாலும் சாதாரண மனிதர்களும், நடுத் தர மக்களும் விமானத்தில் பறக்கும் ஆசையை நிறைவேற்றும் வகையில், சிறு நகரங்களுக்கு இடையிலான விமானப் பயணக்கட்டணத்தை ஒழுங்குப்படுத்தி, ஒரு வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டில் உள்ள 30 கோடி நடுத்தர குடும்பங்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்கும் நிலை ஏற்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இது குறித்து மத்திய மிமானப்போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ”சாதாரண மக்களும் எலிதாக விமானத்தில் பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்வைத்துள்ளது. அதனபடி, நூற்றுக்கணக்கான சிறுநகரங்களுக்கு இடையிலான விமானசேவையை அளிப்பதற்கு விமான சேவை நிறுவனங்களுக்கு அமைச்சகம் அனுமதி அளிக்க உள்ளது.இந்த நகரங்களுக்கு இடையேயான விமானக் கட்டணம் ரூ.2,500-க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
ஒருவேளை அந்த தொகையைக் காட்டிலும் விமான சேவை நிறுவனங்களுக்கு இயக்கும் தொகை அதிகமாக இருந்தால், அதை விமான நிறுவனங்களுக்கு அரசே வழங்கும்.இதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறையாவது. இந்தியாவில் உள்ள 30 கோடி நடுத்தர குடும்பத்தினர் விமானத்தில் பயணிக்க முடியும்.இது தொடர்பான வரைவு அறிக்கை, மக்களின் கருத்துக்கு விடப்பட்டு, அதன் பின்பு பிரதமர் மோடியின் ஒப்புதல் பெறப்படும்.
கடந்த 1998-2004 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசு தொலைத்தொடர்பில் புரட்சி செய்து, தொலைபேசி கட்டணத்தை எளிமையாக்கியது. மத்திய அரசு, எளிமையான கட்டணத்தின் மூலம், இனி அனைவருக்கும் விமானப்பயணக் கனவை எளிதாக்கும் என்றார்.


