எமி ஜாக்சனின் டாப்லெஸ் போட்டோகளால் அப்செட்டான ‘ஐ’ ஷங்கர்

எமி ஜாக்சனின் டாப்லெஸ் போட்டோகளால் அப்செட்டான ‘ஐ’ ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன். இங்கிலாந்து மாடலிங் நடிகையான இவர், ‘மதராசபட்டினம்’, ‘தாண்டவம்’ போன்ற தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.
22 வயது எமி ஜாக்சன், லண்டனில் உள்ள ‘பாஸ் மாடல் மேனேஜ்மெண்ட்’ என்ற மாடலிங் ஏஜென்சிக்காக சமீபத்தில் மேலாடையின்றி, அரை நிர்வாணமாக, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.எமி ஜாக்சனின் இந்த போட்டோ ஷூட்டுக்கு சுசி கிளார்க முக அலங்கார நிபுணராகவும், பாட்ரிக் சிகையலங்கார நிபுணராகவும், அரோரா மாடிகன் ஸ்டைலிஸ்ட்டாகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.இந்த புகைப்படங்களில் எமி ஜாக்சன், இடுப்புக்குக் கீழே, வெள்ளை நிற கருப்புக் கட்டம் போட்ட பேண்ட்டும், தலையில் ஒரு தொப்பியும் அணிந்து உள்ளார். இடுப்புக்கு மேலே, மேலாடை எதுவும் இல்லை.இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது மட்டும் இல்லாமல், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அந்த படங்களை இணைய தளங்களிலும் வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
amy topless
இடுப்புக்கு மேலே திறந்த மேனியாக இருக்கும் எமி ஜாக்சனின் புகைப்படங்களை இணையதளத்தில் பார்த்த இயக்குனர் ஷங்கர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தனது ‘ஐ’ படத்தின் இமேஜையும், அதில் எமி ஜாக்சன் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் இமேஜையும் பாதிக்கும் என்று அவர் கருதியிருக்கிறார்.

தன்னிடம் அனுமதி பெறாமலே, எமி ஜாக்சன் தனது அரை நிர்வாண புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டது, ஷங்கருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால், ஷங்கரின் கோபம் பற்றி எமி கண்டுகொள்ளவே இல்லையாம்.
’ஐ’ படத்துக்காக எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான அரங்கு அமைத்து படமாக்க ஷங்கர் முதலில் திட்டமிட்டு இருந்தாராம்.
amy with shnakar
ஆனால், எமி ஜாக்சனின் அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியான கடுப்பில், ஷங்கர் அந்த பாடல் காட்சியை படமாக்காமலே படப்பிடிப்பை முடித்துக் கொண்டாராம். அந்த பாடல் காட்சி இல்லாமலே ‘ஐ’ படம் திரைக்கு வர இருக்கிறது.

error: Content is protected !!