எனக்கு குரல் வளம் இல்லை! – கருணாநிதி கவலை

எனக்கு குரல் வளம் இல்லை! – கருணாநிதி கவலை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசும் போது, “திமுக ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமுதாய இயக்கம். இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தி பேச எனக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் குரல் வளம் இல்லை. போகபோகச் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்.
12122461_1162188207126716_4937923490003030972_n
இந்தக் கூட்டத்தில் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பொறுப்பை மாவட்டச் செயலாளர்கள் ஏற்க வேண்டும் என்றார். மாவட்டச் செயலாளர்களிடையே ஒரு போட்டி ஏற்பட்டால்தான் வெற்றி கிடைக்கும் என்பதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் நமக்கு கிடைக்கும் வெற்றி, அடுத்துவரும் தேர்தல்களுக்கு அடையாளமாக அல்லது தொடக்கமாக அமைய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்டாலின் அவ்வாறு குறிப்பிட்டார்.

உங்களை மிரட்டுவதற்கோ, செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. எனவே, அவர் கூறியதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சிறிய மாவட்டங்களில் 2 தொகுதிகளிலும் பெரிய மாவட்டங்களில் 3 அல்லது 4 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும். இதை நிச்சயம் உங்க ளால் செய்ய முடியும்.

இந்தத் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்து கொடுத்தால்தான் 92 ஆண்டு கள் வாழ்ந்ததற்கான பலனை நான் அடைய முடியும். எனக்கு குரல் வளம் இல்லை. நாள்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். விரை வில் அனைவருடன் பேசும் வகையில் குணமடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழகத்தில் ஜாதி பேத மற்ற சமுதாயத்தை உரு வாக்குவோம். ஜாதிகளை போற்றினால், புகழ்ந்தால் அந்த ஜாதியே நம்மை அழித்துவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜாதி, மதமற்ற தமிழ்ச் சமுதாயத்தை, திராவிட சமுதாயத்தை கட்டிக் காக்க சபதம் ஏற்போம். இதே அரங்கத்தில் நீங்கள் எல்லாம் வெற்றி வீரர்களாக அமர்ந்திருக்கும் காட்சியை காண்பேன்” என்று கருணாநிதி பேசியுள்ளார்.

Related Posts