ஈராக்கில் 40 இந்தியர்கள் மிஸ்ஸிங்;ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தல்?

ஈராக்கில் 40 இந்தியர்கள் மிஸ்ஸிங்;ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தல்?

ஈராக்கில் மோசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் 40 பேரை ஜூன் 10ம் தேதி முதல் காணவில்லை எனவும், அவர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இத்தகைய சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டதை உறுதி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை எந்த இந்தியரும் தாக்கப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.இதனிடையே ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து வெளியேற முயன்ற 40 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிவாதிகள் கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
40-Indians-kidnapped-in-Ira
ராக்கின் மொசூல் நகரில் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் 40 பேர் அங்கிருந்து வெளியேற முயன்ற வேளையில் கடத்தபட்டுள்ளனர். அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகின்றது. இது இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கின் திக்ரத் நகரில் தவித்து வரும் இந்திய செவிலியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். ஈராக்கில் தொடர்ந்து நிலைமை மோசமடைவதை அடுத்து இந்திய தூதரகக் குழு பாக்தாத் விரைகிறது. அங்குள்ள கல நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு மீட்பு பணிகள் தொடரும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே மொசூல், திக்ரத், சாதியா, ஜலலா, உள்ளிட்ட முக்கியமான நகரங்களை கைப்பற்றிய தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். பாக்தாத்தில் இருந்துது 60கி.மீ தொலைவில் இருக்கும் அவர்கள் மீது அமெரிக்க வான்வழி தாக்குதல் நடத்தகூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Related Posts