இலவச கிளவுட் ஸ்டோரேஜ் – டேட்டா ஃபிளை!
டேட்டா ஃபிளை என்ற ஒரு புது கிளவுட் ஸ்டோரேஜை அறிமுகபடுத்தியுள்ளார் ரூபம் தாஸ் என்னும் இந்தியர். இது என்ன? – அதாவது மொபைல் கனெக்ஷன் முதல் பாங் லோன் வரை உங்களை அடிக்கடி தொந்திரவு செய்யும் டாக்குமென்ட்ஸ் பிரச்சினை – சார் ஃபோட்டோ ஐடி கொடுங்க / அட்ரஸ் ப்ரூஃப் கொடுங்கனு டார்ச்சர். சிலர் எல்லாம் எடுத்து போயிருப்பார்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருக்காது. இந்த தொல்லை இனிமேல் இல்லாமல் இருக்கனும்னா இந்த டேட்டாஃபிளை கிளவுட் ஸ்டோரேஜுக்கு போய் முதல்லா இலவச அக்கவுன்ட் திறங்க. அப்புறம் உங்களை உங்கள் கணனி அல்லது மொபைல் மூலமா ஃபோட்டோ எடுக்கும் அப்புறம் உங்க பேன் கார்ட் / ஆதார் கார்ட் / டிரைவிங் லைசென்ஸ் / வோட்டர்ஸ் கார்ட்டை அப்லோட் செய்யனும். அது உடனே உங்கள் ஃபோட்டோவும் இந்த அட்டையில இருக்கிற படத்தையும் வெரிஃபை செய்யும். ஒரு ஸ்டெப் ஒகே.

அடுத்து உங்க அட்ரஸை டைப் செய்யனும் பின்பு அது ஓசிஆர் டெக்னாலஜி மூலம் அதையும் இந்த அட்டைகளுடன் வெரிஃபை செய்யும். அடுத்து பிறந்த் தேதி மற்றூம் அனைத்தும் வெரிஃபை செய்யும். கடைசியில் நீங்கள் கொடுத்த அட்ரஸை ஜிபிஎஸ் மூலம் வெரிஃபை செய்து அதோட உங்க கையெழுத்தையும் சேர்த்திட்டா – ஆல் ஒகேனு கொடுக்கும் ஒரு டிஜிட்டல் வெரிஃபிக்கேஷன் எஸ் எம் எஸ் / ஈ மெயிலில். இதன் மூலம் அடுத்த முறை உங்களுக்கு தேவையான லோன் மற்றூம் எந்த ஒரு அப்ளிகேஷனுக்கும் நீங்க இதன் மூலம் டைரக்டா அனுப்பிடலாம்.
இதற்கிடையில் வெகு சீக்கிரம் அனைத்து கிரடிட் செக்கிங் ஏஜன்ஸிஸும் இந்த ஆன்லைன் வெரிஃபிக்கேஷனை யூஸ் பண்ண போறாங்க. இதை மிஸ் யூஸ் செய்ய முடியாது ஏன்னா ஒவொரு வாட்டி நீங்க திறக்கும் போது உங்க ஃபோட்டோவை வெரிஃபை செய்யும்ங்க. மொபைல் கம்பெனிஸ் ஏர்டெல் போன்றவை இந்த டாக்குமென்ட்ஸை எலக்ட்ரானிக் முறையில அக்செப்ட் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாம். இது தற்போது வின்டோஸ் 8ல் மட்டும் தான் வேலை செய்யும் விரைவில் மற்ற எல்லா வெர்ஷனுக்கும். வீடியோவை பாருங்க………………http://www.youtube.com/watch?v=ZpNZwq2wh54
ATAFLY – Free Online Cloud storage to digitally store and verify all your ID Proof’s (from PAN card to PASSPORT)-


