இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

இந்தியாவில் அபாயமூட்டும் மின்னணு கழிவு + மின்னணு கழிவை சேகரிக்கும் குழந்தைகள் : அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி

பல வகைகளில் மண்ணையும், மனிதனையும் பலவீனப்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த கொஞ்சம் கூட விழிப்புணர்வுகூட இந்திய மக்களிடையே இன்னும் ஏற்பட வில்லை என அவ்வப்போது கவலை தெரிவிக்க்கத்தான் செய்கின்றார்கள் நிபுணர்கள். குறிப்பாக இந்தக் கழிவுகளின் தொடர் பாதிப்புகள் காரணமாக கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு, புற்றுநோய் போன்ற பேராபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
edit apr 23
வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம், எங்கும் கணினி, அனைவரது கைகளிலும் கைப்பேசி என்ற நிலையைத் தாண்டி “ஸ்மார்ட் ஃபோன்’, “டேப்லெட்’ என்ற நிலையை உருவாக்கி வருகிறது. அது போதாதென்று, அரசுத் திட்டங்களின் காரணமாக அனைவரது வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற நிலை மாறி, அனைவரது வீட்டிலும் லேப்-டாப் என்ற நிலையும் உருவாகி வருகிறது.உலகிலேயே அதிக அளவு கைப்பேசிகள் பயன்பாடு உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்தியா முதலிடத்துக்கு வந்து விடும் என்கின்றது ஒரு புள்ளி விவரம்.

முன்னர் வெளியிடப்பட்ட புள்ளி விவரப்படி 134 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரத்து 838 மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 122 கோடியே 73 லட்சத்து, 60 ஆயிரம் பேர் கைப்பேசி வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 126 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் 92 கோடியே 43 லட்சத்து 187 ஆயிரத்து 927 பேர் கைப்பேசி வைத்துள்ளனர். மூன்றாவது இடத்தில் அமெரிக்கா, அடுத்ததாக பிரேசில், ஐந்தாவது இடத்தில் ரஷியா ஆகியவை உள்ளன.

இவ்வாறு கைப்பேசிகளையும், பிற மின்னணு சாதனப் பொருள்களையும் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பொருள்கள் சந்தையில் அறிமுக மாகின்றபோது, பழையவற்றை தூக்கி எறிந்துவிட்டு புதியதை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் டன் மின்னணு சாதனக் கழிவுகள் இந்தியாவில் உருவாவதோடு, பிற நாடுகளின் மின்னணு சாதனங்களின் கழிவுகளும் இந்தியாவில் கொட்டப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்தான் இந்தியாவில் ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகிறது என்று அசோசேம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் டெல்லி நகரங்களி லிருந்து அதிகமான மின் னணு கழிவுகள் உருவாகின்றன என்று அந்த ஆய்வு குறிப்பிட் டுள்ளது. இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 25 சதவீதமாக இருக்கும் என்றும், 2018-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் டன் என்கிற அளவைத் தொடும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்தியாவில் மின்னணு கழிவு களை உருவாக்குவதில் மும்பை முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1,20,000 மெட்ரிக் டன் கழிவு மும்பையில் உருவாகிறது. இதற்கு அடுத்து டெல்லி 98,000 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்குகிறது. பெங்களூரு 92,000 டன் கழிவுளை உருவாக்குகிறது. பாரஸ்ட் அண்ட் சுல்லிவான் என்கிற அமைப்புடன் சேர்ந்து அசேசேம் இந்த ஆய்வை நடத்தி உள்ளது.இந்த பட்டியலில் சென்னை 67,000 மெட்ரிக் டன், கொல்கத்தா 55,000 டன், அகமதாபாத் 36,000 டன், ஹைதராபாத் 32,000 டன் மற்றும் புனே 26,000 டன் கழிவுகளை உருவாக்குவதாகவும் கூறியுள்ளது.

மோசமான உள்கட்டமைப்பு, சட்டம் மற்றும் முறையான கட் டமைப்புகள் இல்லாத காரணங் களால் இந்தியாவில் 2.5 சதவீத மின்னணு கழிவுகள் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்று இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு கழிவுகளால் இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுசூழலை சீர் படுத்த முடியாத அளவுக்கு கேடு விளைவிக்கின்றன. மேலும் இந்த துறையில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மின்னணு கழிவுகளில் 95 சத வீதத்தை அமைப்பு சாரா பிரிவினரும், குப்பை சேகரிப் பவர்களுமே கையாளுகின்றனர். இந்த மின்னணு கழிவுகளை அழிப் பதற்கு பதிலாக இதை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.இந்தியாவில் பல்வேறு விதமான மின்னணு கழிவுகளை கையாளும் பணிகளில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் 10-14 வயதுக்குட்பட்ட 5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசேம் பொதுச் செயலாளர் டி எஸ் ராவத் குறிப்பிட்டார். மின்னணு குப்பை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த விதமான அறிவியல் முறைகளையும் பின்பற்றாமல் இருப்பது கவலையளிப்பதாகும். பல்வேறு கதிரியக்க கழிவு களும் கவனக்குறைவாக கையாளப் படுகின்றன என்றார்.குழந்தைகளை இந்த துறையில் ஈடுபடுத்துவதை நிறுத்த இதற்கு உறுதியான சட்ட வழிகளைக் காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Posts