இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கிரேடு-IV பணி வாய்ப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் (IOCL) பொறியியல் உதவியாளர் கிரேடு-IV பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineering Assistant – Grade IV
மொத்த காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Electrical துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.11900 – 32000
வயதுவரம்பு: 26-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை INDIAN OIL CORPORATION LIMITED (PIPELINES DIVISION) என்ற பெயருக்கு State Bank of India, Barauni Refinery Campus Branch, Barauni, Begusarai (Branch Code: 1502) மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Human Resource Manager,
Indian Oil Corporation Limited (Pipelines Division),
BARAUNI – KANPUR PIPELINE, P.O. BARAUNI OIL
REFINERY, DIST- BEGUSARAI, BIHAR, PIN – 851114.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iocl.com/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


