ஆடிப் பாடி ஆர்ப்பாட்டம் வேண்டாம்! ஆன்லைனில் நாமினேசன்!- எலெக்சன் கமிஷன் அதிரடி

ஆடிப் பாடி ஆர்ப்பாட்டம்  வேண்டாம்! ஆன்லைனில் நாமினேசன்!- எலெக்சன் கமிஷன் அதிரடி

தமிழகம் உள்பட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில் நடைபெறலாம். தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.
online feb 28
இதனிடையே இந்த தேர்தலில் அனைவரும் பயன்பெறும் வகையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை முழுமை யாக பயன்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன.மேலும் இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஆன்லைன் மூலம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் முறை, தமிழக சட்டசபை தேர்தலில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால் இந்த தேர்தலில், ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது வேட்பாளர்கள்,ஆன்லைனின் தாங்கள் போட்டியிடும் சட்டசபை தொகுதியை தேர்வு செய்து மனு செய்யலாம். அந்த மனுவுடன் தேவையான உறுதி மொழிப் பத்திரம்,சொத்து விவரங்கள் போன்ற இதர தகவல்களை அப்லோட் செய்ய வேண்டும்.அனைத்து தகவல்களும் முழுமையாக பதிவு செய்தவுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த நடை முறையால், வேட்பாளர்கள் ஊர்வலமாக வருவதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதும் முற்றி லும் தடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது. அதேவேளையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுவை, கட்சி பாகுபாடின்றி பெறுவதும், பரிசீலனை செய்வதும் சாத்தியம் ஆகும் என்றும் கருதுகிறது.

அதே போல், தேர்தலின் போது நடைபெறும் முறைகேடுகள் மற்றும் இதர புகார்களை வேட்பாளர்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் தங்களது புகாரை பதிவு செய்தவுடன், அதற்கு ஒப்புகைச் சீட்டுடன் அடையாள எண் வழங்கப்படும். இந்த எண் மூலம் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

error: Content is protected !!