”அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.!” – டி. ஆர் ஓப்பன் டாக்

”அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.!” – டி. ஆர் ஓப்பன் டாக்

”சினிமாவில் எப்படி சம்பாதிக்கணும் என்று ரூட் போட வேண்டும். சினிமா அழிஞ்சுட்டு இருக்கு. ஆந்திரா, கர்நாடகாவில் திருட்டு வி.சி.டி ஒழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒழிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியும். முதல்வர் பார்வைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். உங்களால் பேச முடியவில்லையா. அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.”என்றார் தெரிவித்தார் டி.ராஜேந்தர்.
t r adama audio
சிம்ஹா, கருணாகரன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க, பத்ரி இயக்கி இருக்கும் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,”.நான் இன்றைக்கு இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் இன்ஷா அல்லாஹ். மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் எல்லாம் வல்ல இறைவன். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் டி.ராஜேந்தர் என்று போட்டார்கள். எம்.ஏ என்று போடவில்லை. எனக்கு வேண்டாம். ஏனென்றால் அது நான் படிச்சு வாங்கின பட்டம். சினிமாவில் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால், எனது பெயருக்கு பின்னால் நான் பட்டம் போட்டுக்கிட்டதே இல்லை. நான் பட்டத்தை எல்லாம் நம்புறதில்லை. சினிமாவில் பட்டம் எல்லாம் அப்போ அப்போ பறந்துவிடும். இது தான் உண்மை. பட்டம் ஆகிவிடும் சமயத்தில் தம்பட்டம். நான் படிச்சு வாங்கின பட்டம் மட்டும் தான் எனக்கு நிரந்தரம்.

யார் நம்மளை உருவாக்கினார்களோ, அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். என்னை இந்த விழாவிற்கு வருவதற்கு இம்ப்ரஷ் பண்ணியது ஒரு இதயம்.அவர் இயக்குநர் பத்ரி. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழாவிற்கு டி.ஆர் வர்றாரா, சிங்கப்பூரில் இருந்து வருகிறேன் என்று என் தாய் சொல்றாங்க. அவருடைய ஆசைக்காகவது நீங்க வரவேண்டும் என்று சொன்ன வார்த்தை என்னை இங்கே வரவைத்தது.(கண் கலங்கியபடி) ஒரு தாயின் சபதம் எடுத்தவன், தாய் தங்கை பாசம் எடுத்தவன், என் தங்கை கல்யாணி எடுத்தவன், என் தங்கைக்கு ஒரு கீதம் எடுத்தவன் இப்படி தாய்மார்களுக்காக படம் எடுத்தவன். அந்த தாய் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி, என்னை அழைத்தார்.

நீ ஒரு டண்டணக்கா, உனக்கு அவ்வளவு தான் தெரியும் என்றார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் WORKING WITH டி.ராஜேந்தர் ONCE UPON A TIME. HE WAS WORKING WITH ME AS A KEYBOARD PLAYER. ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான், எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பார்த்து என்ன சொன்னால் என்ன? நான் சம்பாதித்து இருக்கிறேன் டன் கணக்கா. இவ்வளவு இருந்து எனக்கும் ஆப்புன்னா, உனக்கு எந்தளவிற்கு வைப்பான் ஆப்பு யோசிச்சுக்கோ. இவ்வளவு திறமை இருக்கிறவனை பண்ணுவான் கிண்டலு.

நாட்டில் எல்லாவற்றிலும் சூது இருக்கிறது. அரசியலிலும் சூது இருக்கிறது. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் அடிச்சுக்கிற மாதிரி தெரியும். அவர்களுக்குள் ஒரு UNDERSTANDING இருக்கும். யாருக்குமே தெரியாது.

இன்றைக்கு பெண்களை மையப்படுத்தி படம் எடுத்தால், திரையரங்கிற்கு பெண்கள் வருவதில்லை. காரணம் டிக்கெட் விலை. ஒரு வாரத்தில் 8 படங்கள் ரிலீஸானால் எப்படி ஓடும். மலை போல் படங்கள் குவிந்தால் படங்கள் எப்படி ஓடும். பெண்கள் மையப்படுத்திய படங்கள் டிக்கெட் விலையை குறைத்தால் மட்டுமே ஓடும். என்னுடைய படங்களுக்கு திருட்டு வி.சி.டி வந்த போது, வீதிகளில் இறங்கி கடையை உடைத்தேன். எத்தனை கேஸ் தெரியுமா? மூன்று முதலமைச்சர்களுக்கு எதிராக இறங்கி போராடினேன் என்றால் இழந்து இருக்கிறேன் அத்தனை கோடி. அதனால்தான் துணிச்சலாக நிற்கிறான் இந்த தாடி. அதனால் டி.ஆர் பேசுகிறான் என்றால் கூட்டம் நிற்கிறது கூடி.

கர்நாடகாவில் ஒரு திருட்டி வி.சி.டி காட்டுங்க. முடியாது. பயப்புடுகிறான். ஆந்திராவிலும் கிடையாது. ஏனென்றால் டிக்கெட் ரேட் கம்மி. மலையாளத்தில் த்ரிஷ்யம் படம் 64 கோடி வசூல். மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். மூன்று நாட்களுக்கு ஓடினால் படமா. படம் போடுகிறார்கள் அத்தனை கோடி, படத் தயாரிப்பாளரோ தெரு கோடி. என்ன வெற்றி.

கீ-போர்டு வாசிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா? பாடல் எல்லாம் ஹிட்டா. இனிமேல் டி.ஆர். மியூசிக் பண்ணினால் பாதி வார்த்தை ஆங்கிலத்தில் தான் எழுதப் போறேன். இப்போ உங்களுக்கு புரியமா பாடணும், புரியமால் பண்ணனும் அவ்வளவு தானே. பண்றேன்யா.. சினிமாவில் எப்படி சம்பாதிக்கணும் என்று ரூட் போட வேண்டும். சினிமா அழிஞ்சுட்டு இருக்கு. ஆந்திரா, கர்நாடகாவில் திருட்டு வி.சி.டி ஒழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒழிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியும். முதல்வர் பார்வைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். உங்களால் பேச முடியவில்லையா. அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.” என்று பேசினார்