போதை ஓட்டிகளை கண்டறியும் லேசர்!

போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வசதியுடன் கூடிய நவீன செல்போன் வந்திருப்பதும் பிரீத் அனலைசர் எனப்படும் போதையில் வாகனம் ஓட்டி வருபவரை கண்டறியும் வசதியும் இந்த போனில் இருக்கும். அதற்கென தனி கருவி இனி தேவைப்படாது என்பதும் அறிந்த நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள். மதுவின் வாடையை கண்டறியும் விதமாக ஒரு லேசர் கருவியை அவர்கள் உருவாக்கி உள்ளனர். அதை சாலைகளில் ஒரு கேமராவுடன் பொருத்தினால் போதும். அந்தச் சாலையில் ஓடும் ஏதாவது காரிலிருந்து மது வாடை வந்தால் உடனே நம்பர் பிளேட்டுடன் அந்த காரை படம்பிடித்து போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பிவிடும்.
பொதுவாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்செல்வது பேராபத்தை ஏற்படுத்தும். அதை தடுக்க போலீசார் ப்ரீத் அனலைசர் என்னும் கருவியை கொண்டுதான் கார் டிரைவர்கள் குடி போதையில் இருக்கிறார்களா? என சோதனை போட்டு அபராதம் விதிக்கிறார்கள்.இந்த ப்ரீத் அனலைசர் கருவி மூலம் மது அருந்தியவரை துல்லியமாக கண்டிபிடிக்க முடியுமா? பொதுவாக மது அருந்தியவரின் ரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் இலகுவாக கலந்துவிடுகிறது.
ரத்த ஓட்டத்தில் கலந்த ஆல்கஹால் நுரையீரலில் இருக்கும் ஆல்வியோலை என்ற நுண் துவாரங்கள் வழியாக ஆவியாகி கரியமில வாயுவுடன் சேர்ந்து சுவாசம் மூலம் வெளியேறும்.
இதுபோன்று சுவாசத்தில் ஆவியாக வெளியேறும் ஆல்கஹால் அளவை வைத்தே ஒருவர் எவ்வளவு குடித்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடுகிறது ப்ரீத் அனலைசர் கருவி.அதே சமயம், போதிய அளவு காற்றை ஊதினால்தான் இந்த கருவி துல்லியமாக கணக்கிடும். இதில், சிலர் குறைந்த அளவு காற்றை ஊதிவிட்டு தப்பிக்க வழியுண்டு.
இந்நிலையில்தான் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள். மதுவின் வாடையை கண்டறியும் விதமாக ஒரு லேசர் கருவியை அவர்கள் உருவாக்கி உள்ளனர். அதை சாலைகளில் ஒரு கேமராவுடன் பொருத்தினால் போதும். அந்தச் சாலையில் ஓடும் ஏதாவது காரிலிருந்து மது வாடை வந்தால் உடனே நம்பர் பிளேட்டுடன் அந்த காரை படம்பிடித்து போக்குவரத்து போலீஸாருக்கு அனுப்பிவிடுமாம்.