பிசிசிஐ அறிமுகம் செய்த புது ஜெர்சி : இந்திய அணிக்கு புது பலம்?

பிசிசிஐ அறிமுகம் செய்த புது ஜெர்சி : இந்திய அணிக்கு புது பலம்?

டி 20 ஓவர் 8-வது உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் உற்சாகமான ரசிகர்கள் முன்னிலையில் இந்தப் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

 

One Blue Jersey என்ற பெயரில் இந்த ஜெர்சி பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய ஜெர்சியின் கை பகுதி கருநீல வண்ணத்திலும், உடல் பகுதி வெளிர் நீல வண்ணத்திலும் உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் புதிய ஜெர்சி மீது எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில் மீண்டும் பழையபடி வெளிர் நீல வண்ணத்திற்கு திரும்பியுள்ளது இந்திய அணியின் ஜெர்சி. இனி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த புதிய ஜெர்சியை அணிந்து கொண்டுதான் இந்திய அணி விளையாடும் என தெரிகிறது. “கிரிக்கெட் ரசிகர்களே இது உங்களுக்கானது. எம்பிஎல் ஸ்போர்ட் வழங்கியுள்ள One Blue Jersey” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. கடைசியாக 2007-08 சீசனில் இந்திய அணில் வெளிர் நீலத்திலான ஜெர்சியை அணிந்து விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா தொடர், தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இந்த புதிய ஜெர்சியை அணிந்து விளையாடும் என தெரிகிறது. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள்.

“One Blue Jersey” நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, ஷபாலி வர்மா, சூரியகுமார் யாதவ், ரேணுகா சிங் ஆகியோர் அணிந்து கொண்டுள்ள புகைப்படத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது

error: Content is protected !!