32°C
விளம்பரம்
Advertisement

ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்!

admin சேலம் Published: October 2, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



சினிமா என்பது வெறும் கேளிக்கை சாதனமாக மட்டுமே சுருக்கிப் பார்க்கப்படும் காலகட்டத்தில், அது மனித மனதின் ஆழமான உணர்வுகளைத் தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கும் மிக வீரியமான ஊடகமாகவே இன்றும் திகழ்கிறது என்பதற்குப் பல கலைப்படைப்புகள் சாட்சியாக அமைந்துள்ளன. வெறும் வணிக ரீதியான சண்டைக் காட்சிகளோ அல்லது தீவிரமான பழிவாங்கல்களோ இல்லாமல், எதார்த்தமான மனித வாழ்க்கையைப் பதிவு செய்யும் கதைகளும், அவற்றுள் வெளிப்படும் பயம், வெகுளித்தனம், குற்றவுணர்வு, பாசம், காலப் பயணம் போன்ற பல்வேறு உளவியல் பரிமாணங்களும் பார்வையாளர்களின் மனதை ஆழமாக ஆக்கிரமிக்கின்றன. ஒரு திரில்லர் கதைக் களத்திலும்கூட கதைமாந்தர்களின் இயல்பான தவிப்புகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் பிசிறின்றி வெளிப்படுத்தும்போது, அது வெறும் படமாக இல்லாமல் ரசிகர்களின் ரத்தத்தோடு கலந்துவிடும் வாழ்வியல் அனுபவமாக மாறுகிறது; இதுவே திரைப்படங்களைச் சாதாரணப் பொழுதுபோக்கைக் கடந்து ஒரு வலிமையான சமூக மற்றும் உளவியல் வெளிப்பாட்டு ஊடகமாக உயர்த்துகிறது என்பதை நிரூபிக்கும் வெள்ளித் திரைப்படைப்பே ’ஏழு கடல் ஏழு மலை’.

கதை

இராமாயணம், மஹாபாரதம் தொடரை இன்றளவும் கண்சிமிட்டாமல் பார்க்கும் மாந்தர்கள் நிறைந்த இப்பூவுலகில் சுமார் 8,000 ஆண்டுகளாக உயிரோடு உலா வரும் மர்ம மனிதர் நிவின் பாலி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து பிறப்பு இறப்பு என்றெல்லாம் இல்லாமல் ஒரே மனிதனாக பல்வேறு பிறப்புகளிலும் ஒரே பெண்ணை (அஞ்சலி) காதலிپவன் அவன் என்பதுதான் மெயின் லைன். இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு நினைவுத் தொடர்ச்சி இல்லை. ஒவ்வொரு பிறவியிலும் அவளுக்கு அதை நினைவூட்ட வேண்டும். சில பிறவிகளில் அவளை பார்த்து விட்டு மட்டும் கூட போய் விடுவது உண்டு. இப்படியாக பல பிறவிகளைக் கடந்து தொடரும் அந்தக் காதலைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் நிவின் பாலி, ஒரு ரயில் பயணத்தில் சூரியை சந்திக்கிறார். வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பும் சாதாரண மனிதர் சூரி. ரயிலில் நிவின் பாலியை சந்திக்கும் அவர், ஆரம்பத்தில் அவரது வித்தியாசமான தோற்றத்தையும் பேச்சையும் புரிந்து கொள்ள முடியாமல் தயங்குகிறார். ஆனால், இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் மூலம் நிவின் பாலியின் வாழ்க்கை, காதல் மற்றும் அவர் கடந்து வந்த காலங்கள் மெல்ல விரிகின்றன. அப்போது கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு இடைநிறுத்தம் இல்லாத அந்த பயணத்தில் இருவருக்குமான மொழி மற்றும் கருத்து வேறுபாடு விபரீதமாக போய் கொண்டு போகும் சூழலில் கதவிடுக்கில் சிக்கிய ஒரு எலியை நாடு திரும்பும் தமிழன், ரயில் கதவு இடுக்கில் வைத்து கொல்ல முயல்வதால் நிகழ்வதே இப்பட ஸ்டோரி.

நடிப்பு

எட்டாயிரக்கணக்கான ஆண்டுகளாக காதலை சுமந்து அலையும் ஜீவனாக நிவின் பாலி கிடைத்த கதாபாத்திரத்தின் வலுவை முழுமையாக உள்வாங்கி பிரமாதப் படுத்தியிருக்கிறார். காதலின் மீதான அன்பும்,தவிப்பும் மட்டுமின்றி கோபம், வேதனை, இயலாமைவலி என ஏகப்பட்ட உணர்வுகளை முகபாவனைகளின் மூலமே வெளிப்படுத்து கவர்கிறார். அதிலும் நீண்ட தலைமுடி, தாடி என அவரது தோற்றமும் ஏற்றுக் கொண்ட ரோலுக்கு உரிய பத்து பொருத்தமும் அட்சரம் பிசகாமல் பொருந்தி போய் இருப்பது தனி எபிசோட்.

பரோட்டா சூரி முன்னொரு காலம் கையாண்டு வந்த காமெடி ரோலில் இருந்து விலகி, குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு சாதாரண மனிதராக நடித்து அப்போதே நாயகனுக்குரிய பரிணாமம் அடைந்து கொண்டிருந்தது அப்பட்டமாக தெரிகிறது. நாயகன் நிவின் பாலியுடன் அவர் நடத்தும் உரையாடல்களும், அவர்களுக்கிடையே உருவாகும் உறவும் ரசிக்க வைக்கும் எபிசோட்டாக இருக்கிறது. அவரது இயல்பான உடல்மொழியும், அப்பாவித்தனமான நடிப்பும் பல காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

கற்றது தமிழ் காதலியாக வரும் அஞ்சலி அதே புன்னகை தவழும் இயல்பான பாவனையுடன் அருமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக வசனங்கள் போதிய அளவு இல்லாவிட்டாலும், கண்கள் மற்றும் முகபாவனைகள் மூலமாக காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார். அதிலும் நிவின் பாலியுடன் இணைந்து வரும் காட்சிகளில் அவரது நடிப்பு மென்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்து பலே சொல்ல வைக்கிறது.

டெக்னிஷியன்ஸ்

கேமராமேன் என்.கே. ஏகாம்பரத்தின் கேமரா கதைக் களத்தின்ன் காலம் கடந்த கற்பனை உலகிற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ரயில், காடு, மலை, கடல் என மாறுபட்ட நிலப்பரப்புகளை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதுடன், கதையின் ஃபேண்டஸி தன்மையையும் காட்சிகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஸ்பெசிபிக்கா சொல்வதால் ஒரு ரயில் பயண அனுபவத்தை காடு, மேடு,வான்வெளி என்று மாற்று பார்வையில் தன் சாதனம் மூலம் ரசிகனை புளங்காகித்த வைத்து விடுகிறார்.

இசை அமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் கைவண்ணமும் படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் உணர்வை மேலும் உயர்த்துகிறது.

மொத்தத்தில் பழங்கதைகள் மற்றும் விசித்திரக் கதைகளின் (Fable) தன்மையைக் கொண்டு மனிதக் காதல், தனிமை, மரணம் மற்றும் உயிரோட்டம் போன்ற பெரிய கருப்பொருள்களை இப்படம் ஆழமாக ஆராய்கிறது. வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களை மீறி, மனித மன உணர்வுகளுக்கும் பிரபஞ்சத் தத்துவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கலைப் படைப்பாக இப்படம் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது என்றாலும் கனத்த மனத்துடன் காண வேண்டிய சினிமா இது.

ரேட்டிங்: 3/5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்