ஜின்பெங்கை காணவில்லை :உலகம் தேடிகொண்டிருக்கின்றது!

எப்படியும் உலகை ஒருகாலத்தில் ஆளவேண்டும் ஆளபோகின்றோம் என கிளம்பிய நாடு சீனா, 1990க்கு பின் அது பழைய சோவியத் இடத்தை அமெரிக்காவுக்கு ஈடான இடத்தை பிடிக்க இலக்கு வைத்து பாய்ந்தது. அங்கு தேர்தல் கிடையாது, கட்சிகள் என்றால் என்னவென்றே தெரியாது, ஒரே கட்சி கம்யூனிஸ்ட் அது தங்களில் ஒருவரை அதிபராக அமர்த்தும், அப்படி அமர்த்தபட்டவர் ஷி ஜின்பெங். இவர்தான் சீனாவின் புட்டீன் அல்லது சீனாவின் கொமேனி எல்லா அதிகாரமும் இவரிடம் மட்டுமே குவிந்திருக்கும், இவர் வைத்ததுதான் சட்டம். சீன முரசொலி குளோபல் டைம்ஸ் முதல் சிசிடிவி வரை கலைஞர் டிவி ஸ்டாலினை புகழ்வதுபோல் இவரை மட்டுமே புகழும் இவரும் அவ்வப்போது அமெரிக்காவை மிரட்டுவார், நாங்களின்றி உலகமில்லை என்பார் என்னென்ன சவால்களெல்லாமோ இடுவார், உலகமகா சீன நெடும்சாலை எல்லாம் இவர் கனவு, சீனாவில் மிக சக்திவாய்ந்த நபராக அறியப்பட்டார்.அப்படிபட்ட அன்னார் கவிழ்ந்த இடம் இரண்டு.
முதலாவது சந்தேகமே இல்லாமல் இந்தியா பாகிஸ்தான் போர், இவர் பாகிஸ்தானை சீன மாகாணமாக ஆக்கி அங்கு சீன ராணுவ முகாம்களை பயணிகள் விமான நிலையம் போல் அமைத்திருந்தார் இன்னும் ஏகபட்ட சீன கட்டுபாடுகள் ரகசியாக வந்தன அங்கு கொட்டபட்ட பணம் ஏராளம் ,அவரின் கணக்குபடி பாகிஸ்தான் இந்தியாவினை போருக்கு இழுத்து நஷ்டபடுத்தினால் அது சீனாவுக்கு நல்லது சீன ஆயுதசந்தை உள்பட பலவற்றுக்கு இந்தியா தடையாக இராது என்பது இன்னொரு விஷயம் சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் அதை இந்தியா கைபற்றினால் இவர்களுக்கு சிக்கலாகும், இதனால் இந்தியா ஒரு குழப்பத்தில் இருக்க பாகிஸ்தானை சீனா தூண்டிவிடும்சீனாவின் இந்த திட்டம் அமெரிக்கா இந்தியா என எல்லோருக்கும் தெரியும் அது வேறுவிஷயம்.
இந்நிலையில்தான் 1965ல் எப்படி சீன ஆதரவுடன் பாகிஸ்தான் போர் தொடுத்ததோ அப்படித்தான் பஜல்ஹாமிலும் வம்பிழுத்தார்கள் ஆனால் இந்தியா வெறும் நான்கு நாட்களில் சீன ஆயுதங்களை உடைத்து பாகிஸ்தானை நொறுக்கியதில் எல்லா திட்டமும் பாழாயிற்று . ஜெ20, ஜெ35, பில் எல் ரக ஏவுகனை, எச்க்யு 9 சிஸ்டம் என எல்லாம் இந்தியா உடைத்து போட சீனாவின் பல்லாயிரம் கோடி ஆயுத வணிகம் பாதிக்கபட்டது, 40 நாடுகள் பின்வாங்கின.அன்னார் இங்கே ஆடிபோனார், அந்த அடிக்குமேல் பெரும் அடி ஈரானில் விழுந்தது.
ஒரு வருடத்துக்கு முன்னர் இவர்தான் சவுதி ஈரானிய அரசுகளை சீனாவிற்கு வரவழைத்து கைகுலுக்கி இனி நாங்கள்தான் பெரியண்ணன் என்ன நடந்தாலும் அண்ணனிடம் வரவேண்டும் ஈரானுக்கு அண்ணன் உண்டு என சொல்லி அனுப்பினார்.ஆனால் பாகிஸ்தானில் சீன ஆயுதங்கள் அடிவாங்கியதை போலே ஈரானிலும் பெரிய பெரிய அடியினை வாங்கியது, ஈரானிய ராணுவம் அவசர காலத்தில் கைவிட்ட சீன ஆயுதங்களை வீசிவிட்டு ஒளிந்து கொண்டது, அதைவிட கொடுமையாக ஈரான் மேலான தாக்குதலில் ஐநாவில் சீற்றம், ராணுவ மிரட்டல் என எதையும் சீனா செய்யவில்லை. இதனால் இப்போது ஈரானில் செய்யபட்ட சீன முதலீடுகள் கதி சிக்கலாகின்றது, நஷ்ட ஈடு என ஈரான் எடுத்து கொள்ளலாம்.
பெரிய ராஜதந்திரியாக இந்தியா அல்லாத சார்க் அல்லாத அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவினை தனிமைபடுத்துவேன் என்றார், வங்கதேசமே அலறி அடித்து ஓடியது, இலங்கை கழன்றுகொண்டது அன்னார் அதிர்ச்சியானார். இலங்கை சீனபிடியில் இருந்து நழுவிவிட்டது. சீன அரச பணத்தை பாழ்படுத்தினார், சீன ராணுவத்தை பலவீனமாக்கினார், சீன பெருமையினை குலைத்தார், இவரின் திட்டங்களால் சீன பொருளாதாரம் தள்ளாடுகின்றது எல்லாவற்றுக்கும் இவரே காரணம் என சீன கம்யூனிச கட்சிக்குள் குரல்கள் வெளிபடையாகவே கேட்டன.இன்னொரு பக்கம் டிரம்பர் எடுத்த நடவடிக்கைகளால் சீனாவுக்கு சிக்கல்கள் அதிகம், இப்படி பல வலைகளுக்குள் கிடப்பதால் அன்னார் நிலமை அப்பல்லோ ஜெயலலிதா போல் ஆகிவிட்டது.
முன்பெல்லாம் பிரிக்ஸ் மாநாடு உள்ளிட்ட எல்லா மாநாட்டுக்கும் ஓடிவந்து புத்தர்கோல சிரிப்பை தருவார், அதுவும் ரஷ்யா போரில் சிக்கியபின் உலகிற்கே தங்களை தவிர யாருமில்லை என மர்மபுன்னகை பூத்து சிரிப்பார்.அப்படியானவர் பாகிஸ்தானில் வாங்கிய அடி, ஈரானில் வாங்கிய அடி என பல அடிகளால் வீட்டில் முடங்கிவிட்டார் என்கின்றன செய்திகள், முடங்கினார் என்பதால் முடக்கபட்டார் என்பதா என்பது வில்லங்கம். புட்டீனையும் நம்பமுடியாது தனக்கு போட்டியாக உருவான ஒரு நாட்டை அதுவும் உக்ரைன் போரில் தனக்கு உதவாத சீன தலமையினை அவர் புன்னகைத்தபடி நோக்கியிருக்கலாம்.ஆக இந்தியாவும் இஸ்ரேலும் அடித்த அடியில் பிஜீங்கின் புத்தபெருமானை காணவில்லை என்பது தற்போதைய செய்தி, பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் முதல் முறையாக அய்யா இல்லை.அங்கே புட்டீனும் இல்லை இவரும் இல்லை எனும் நிலையில் சிங்கமென தனித்து நிற்கின்றார் மோடி, அதை பார்த்தபின் அன்னாரின் நிலை அப்பல்லோவின் கடைசி கால ஜெயலலிதா போல் ஆகியிருக்கலாம்.அப்பல்லோவுக்காவது வெங்கய்ய நாயுடு வந்தார் இன்னும் சிலர் வந்தார்கள் ஆனால் பிஜிங்க் அதைவிட மர்மமானது, நடப்பது எதுவும் தெரியாது, ஜின்பெங் மீண்டு வந்தால் பார்த்து கொள்ளலாம் .
ஆக பாகிஸ்தானை ஈரானை நம்பியவர் இப்படி ஆனாரா, இவரை நம்பி அவர்கள் அப்படி கிடக்கின்றார்களா என்பது பட்டிமன்றம் வைத்து முடிவு செய்யவேண்டிய ஒன்று. இவர் முடங்கினார் என்றவுடன் முதல் ஆளாக வந்து அடுத்த தலாய்லாமா பற்றி பேசுகின்றார். நடப்பு தலாய்லாலா, திபெத்தியர் நம்பிக்கைபடி பதவியில் இருக்கும் தலாய்லாமா இறந்த மறுநொடி எந்த குழந்தை பிறக்குமோ அதுதான் அடுத்த தலாய்லாமா, இதை திபெத் மடம் உறுதி செய்யும். ஆனால் சீன அரசு அதெல்லாம் அடுத்த தலால்லாமாவினை நாங்கள் முடிவு செய்வோம் என சொல்லிமிரட்டியது அதன் அர்த்தம் உதயண்ணா விஜயண்ணா போல் ஒருவரை அவர்கள் உருவாக்குவார்கள் என்பது. இது சர்ச்சையான நிலையில் இப்போது நடப்பு தலாய்லாமா அடுத்தவரை நாங்களே தேர்ந்தெடுப்போம் என்கின்றார் , அவரை மிரட்ட ஜின்பெங்கை காணவில்லை உலகம் அவரை தேடிகொண்டிருக்கின்றது.வழக்கமாக தமிழக கம்யூனிஸ்டுகள் எதற்கெடுத்தாலும் சீனாவை பார் என கத்துவார்கள், அந்த செங்கொடி வீரர்களையும் இப்போது காணவில்லை என்பதுதான் விஷயம், இனி அவர்களையும் உலகம் தேடவேண்டும்.