32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 69)
நிலைபெறும் பொருளாதாரம்…நீடிக்கும் பருவமழை அச்சம்! Exclusive

நிலைபெறும் பொருளாதாரம்…நீடிக்கும் பருவமழை அச்சம்!

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical tensions) மெல்லத் தணிந்து வரும் வேளையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை நெருங்கக்கூடும் என்ற சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பல முன்னணி பொருளாதாரப் பொருளாதார ஆய்வாளர்களும், நிறுவனங்களும் தங்களது முந்தைய கணிப்புகளை மாற்றி அமைத்து, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை உயர்த்தத் தொடங்கியுள்ளனர். பொருளாதாரத்தின் இந்த வலுவான பின்னடைவுத் திறன் (Resilience) ஒருபுறம் நம்பிக்கையை அளித்தாலும், மறுபுறம் எழும் […]

July 2, 2026 admin
விளையாட்டு உலகின் தூண்கள்: உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம்! Exclusive

விளையாட்டு உலகின் தூண்கள்: உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம்!

விளையாட்டு மைதானத்தில் நடக்கும் சாதனைகளையும், வீரர்களின் வியர்வைத் துளிகளுக்குப் பின்னால் இருக்கும் அர்ப்பணிப்பையும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் தாரக மந்திரவாதிகள் விளையாட்டு பத்திரிகையாளர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதி, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நிருபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களின் அயராத உழைப்பையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் “உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம்” (World Sports Journalists Day) கொண்டாடப்படுகிறது. ரசிகர்களைத் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளுடனும், நட்சத்திர வீரர்களுடனும் இணைக்கும் பாலமாக விளங்கும் இந்தப் […]

July 2, 2026 admin
டிஜிட்டல் பூகம்பம்:வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ அம்சத்தை முடக்கிய இந்திய அரசு! Exclusive

டிஜிட்டல் பூகம்பம்:வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ அம்சத்தை முடக்கிய இந்திய அரசு!

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒரு செயலி வாட்ஸ்அப் (WhatsApp). தற்போது இந்த செயலியின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta), வாட்ஸ்அப்பில் புதிய தொழில்நுட்ப மாற்றமாக “யூசர்நேம்” (Usernames) என்ற அம்சத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. உலகளவில் இந்த அம்சம் சோதனை முறையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்துவதற்கு இந்திய அரசு (மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் – MeitY) தற்காலிகத் தடையை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாக […]

July 1, 2026 admin
இந்தியா – பாக்: 100 ஆளுமைகளின் அமைதித் தூது! Exclusive

இந்தியா – பாக்: 100 ஆளுமைகளின் அமைதித் தூது!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான சுமுகமான உறவு என்பது தெற்காசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தூதரக ரீதியான சுணக்க நிலையை மாற்றி, மீண்டும் சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இரு நாடுகளின் சிவில் சமூகத்தினரிடையே வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் […]

July 1, 2026 admin
வங்கித் துறையில் மெகா வேலைவாய்ப்பு: 6,715 துணை மேலாளர் பணியிட அறிவிப்பு! Exclusive

வங்கித் துறையில் மெகா வேலைவாய்ப்பு: 6,715 துணை மேலாளர் பணியிட அறிவிப்பு!

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வு, இந்த ஆண்டும் மிக அதிக அளவிலான காலிப் பணியிடங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை உத்தரவாதம், கௌரவமான பதவி, சிறப்பான ஊதியம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தேர்விற்குத் தயாராகி வருபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வித் தகுதியும் வயது வரம்பும் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு […]

July 1, 2026 admin
கற்பனை உலகமும் காமப் புனைகதைகளும்: புத்தகச் சந்தையை அதிரவைக்கும் பெண் வாசகர்கள்! Exclusive

கற்பனை உலகமும் காமப் புனைகதைகளும்: புத்தகச் சந்தையை அதிரவைக்கும் பெண் வாசகர்கள்!

சமீபகாலமாக உலகளாவிய புத்தகப் சந்தையிலும், குறிப்பாக இணைய வழி வாசிப்புத் தளங்களிலும் பெண்களின் வாசிப்புப் பழக்கம் குறித்த புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. காதல் மற்றும் உறவுகள் சார்ந்த நாவல்களைத் தாண்டி, அதீதக் காமம் மற்றும் பாலியல் வர்ணனைகள் நிறைந்த புனைகதைகளைப் பெண்கள் அதிகம் வாசிப்பது உலகளவில் பெரும் டிரெண்டாக மாறியுள்ளது. உலகில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் பெண்களைக் குறிவைத்து எழுதப்படும் ‘ரோமான்ஸ்’ (Romance) மற்றும் ‘எரோட்டிகா’ (Erotica – பாலியல் வர்ணனைக் […]

July 1, 2026 admin
குழந்தைகளுக்குக் குடியுரிமை உண்டு: டிரம்பின் தடையை நீக்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட்! Exclusive

குழந்தைகளுக்குக் குடியுரிமை உண்டு: டிரம்பின் தடையை நீக்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட்!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுப்பது மற்றும் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்குவது ஆகியவற்றைத் தனது முதன்மை அரசியல் முழக்கமாகக் கொண்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை வழங்கும் “பிறப்புரிமைக் குடியுரிமை” (Birthright Citizenship) முறையை ரத்து செய்ய முயன்றார். இதற்காக அவர் பிறப்பித்த அதிரடி உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரானது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. 100 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் பாதுகாப்பு அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் […]

July 1, 2026 admin
அமர்நாத் யாத்திரை 2026:கூடுதல் பாதுகாப்பும்,புதிய கட்டுப்பாடுகளும்! Exclusive

அமர்நாத் யாத்திரை 2026:கூடுதல் பாதுகாப்பும்,புதிய கட்டுப்பாடுகளும்!

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் அமர்நாத் யாத்திரை, இந்த முறை வழக்கத்தை விட அதிகக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் சமீபகாலமாக நடந்த சில அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பாதுகாப்புப் படைகள் புதிய உத்திகளைக் கையாண்டு வருகின்றன. முப்படைப் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு யாத்திரை நடைபெறும் பால்டால் (Baltal) மற்றும் பஹல்காம் (Pahalgam) ஆகிய இரு முக்கியப் பாதைகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை […]

July 1, 2026 admin
ஓய்வுக்குப் பின் புத்திசாலிகள் ஏன் சமூக வட்டாரங்களிலிருந்து மாயமாகிறார்கள்? Exclusive

ஓய்வுக்குப் பின் புத்திசாலிகள் ஏன் சமூக வட்டாரங்களிலிருந்து மாயமாகிறார்கள்?

பணி ஓய்வுக்குப் பின் பலரும் தங்களைச் சுற்றிலும் உறவுகளும் நண்பர்களும் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், மிகக் கூர்மையான சிந்தனை கொண்ட மனிதர்கள் அதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ஏன் கூட்ட நெரிசலான சமூக வாழ்க்கையிலிருந்து விலகி, அமைதியான தனிமையைக் கொண்டாடுகிறார்கள் என்பதன் பின்னணியில் சில சுவாரசியமான உளவியல் மற்றும் வாழ்க்கை யதார்த்தங்கள் ஒளிந்துள்ளன. போலியான சமூக முகமூடிகளின் மீதான சலிப்பு பணி வாழ்க்கையில் இருந்தவரை பல புத்திசாலிகள் தங்களின் தொழில் நிமித்தமாக, […]

July 1, 2026 admin
சிரிப்பே நம்மை ஒன்றிணைக்கும் பேராயுதம்:சர்வதேச நகைச்சுவை தினமின்று! Exclusive

சிரிப்பே நம்மை ஒன்றிணைக்கும் பேராயுதம்:சர்வதேச நகைச்சுவை தினமின்று!

“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பது சும்மா சொல்லப்பட்ட பழமொழி அல்ல; அது அறிவியல் பூர்வமான உண்மை. மனித வாழ்க்கையின் இயந்திரத்தனமான ஓட்டத்திலும், மன அழுத்தங்களுக்கு மத்தியிலும் நமக்குக் கிடைத்த ஆகச்சிறந்த வரம் சிரிப்பு. மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் இந்தச் சிரிக்கும் குணம் இயற்கையால் வழங்கப்படவில்லை. நடப்பு ஆண்டான 2026-இல், “Laughter Unites Us” (சிரிப்பு நம்மை ஒன்றிணைக்கிறது) என்ற உன்னதக் கருப்பொருளுடன் (Theme) சர்வதேச நகைச்சுவை தினம் ஜூலை 1, புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. […]

July 1, 2026 admin
உடனடி செய்திகள்