உலக சைவ உணவு நாள்!

உலக சைவ உணவு நாள்!

ண்டுதோறும் அக்டோபர் முதல் தேதி, உலக சைவ உணவாளர்கள் தினம் அல்லது  உலக சைவ உணவு நாள் கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்க சைவ உணவாளர்கள் சொசைட்டி, சைவ உணவு முறையினால் ஏற்படும் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நன்மைகள் பற்றிய விழிப்புணர்வைவை ஏற்படுத்த 1977ஆம் ஆண்டு உலக சைவ உணவாளர்கள் அமைப்பை உருவாக்கியது. அதன்படி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 1ஆம் தேதி உலக சைவ உணவாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள் உலக சைவ விழிப்புணர்வு மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சைவ உணவைத் தேர்ந்தெடுக்க மக்களைத் தூண்டுவதும், அதன் நன்மைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும், விலங்குகளைக் காப்பாற்றுவதும் நாள் மற்றும் மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.அமெரிக்காவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் சராசரியாக 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள் என்பதை தங்கள் ஆய்வில் நிரூபித்துள்ளனர். சைவ உணவுகளை விட அசைவ உணவில் அதிக அளவு ஊட்டசத்து இருப்பதாக முன்பு நம்பப்பட்டது, ஆனால் தற்போது சைவ உணவே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதை மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.உலகம் முழுவதும் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். எனவே, சைவ உணவு உண்பதால் ஏற்படும் நன்மைகளை மக்களுக்கு உணர்த்தவும், அவர்களை ஒன்றாக ஆக்கத் தூண்டவும் உலக சைவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

குறிப்பாகச் சொல்வதானால் உடலாரோக்கியத்தில் செரிமானமே முக்கிய பங்கு வகிக்கிறது என அனைத்து மருத்துவ முறைகளும் ஏற்கின்றன. நல்ல செரிமானத்திற்கு சைவ உணவு உதவுவதை ஆங்கிலேய மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர். குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனைவருக்கும் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவிலேயே தேவைக்கு அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மூளையை வலிமைப்படுத்தி வெண்டைக்காய், ஆப்பிள் போன்றவற்றிற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம். சைவ உணவில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால், உடலில் குறைந்த அளவு கொழுப்பு கிடைப்பதால், தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றி, நார்சத்து உணவு வகைகள், சாப்பிடும் எல்லா உணவுகைளை எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது. மிக முக்கியமாக மலசிக்கல் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றவும், இதில் இருக்கும் அதிகமான நார்சத்து பெருங்குடல் நோய், ஆசன வாய் புற்று நோய், மூலநோய் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளை வராமல் தடுத்துவிடுகிறது. சைவ உணவுகள் மந்தத்தை ஏற்படுத்தாமல் உடல் மனம், மூளை ஆகிய இரண்டும் சிறந்த முறையில் வளர்ச்சி அடைய பெரிதும் உதவியாக இருக்கின்றது. சைவ உணவுகள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு உள்ளது. பழங்கள் சாப்பிடுவதால் பித்த அமிலத்தை குடலில் இருந்து அகற்ற உதவி புரிகிறது.

எப்போதுமே சைவ உணவை மட்டுமே உண்பதால் ஏற்படும் பல் விதமான நன்மைகள் பற்றி இந்தப் பார்ப்போமா?.

இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது: சைவ உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

குறைந்த இரத்த அழுத்தம்: சைவ உணவுகளில் பெரும்பாலும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் சாத்தியக்கூறுகளை வெகுவாகக் குறைக்க உதவும்.

எடை இழப்பு: சைவ உணவுகளில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இது எடை இழப்பு மற்றும் பராமரிப்பிற்கு உதவும்.

குடல் இயக்கத்தை சீராக்கும்: சைவ உணவுகளில் தாவர அடிப்படையிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிகரித்த நார்ச்சத்து உட்கொள்வது குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவும். நன்மை செய்யும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஆதரிக்கவும் உதவும்.

டைப் 2 நீரிழிவு நோயின் குறைந்த ஆபத்து: சைவ உணவுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலமும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

புற்றுநோய்களின் குறைக்கப்பட்ட ஆபத்து: சைவ உணவு, பெருங்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

சுற்றுச்சூழல் நன்மைகள்: பசுமை இல்ல வாயு வெளியேற்றம், காடழிப்பு மற்றும் நீர் மாசுபாடு ஆகியவற்றில் விலங்கு, விவசாயம் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக உள்ளது. சைவ உணவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வெகுவாக உதவும்.

மேம்பட்ட மன ஆரோக்கியம்: பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் சைவ உணவுகள் மக்களின் மன ஆரோக்கியத்தை காக்கும்.

சிறப்பான சிறுநீரக செயல்பாடு: சைவ உணவுகள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரக நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

அதிகரித்த ஆக்ஸிஜனேற்ற உட்கொள்ளல்: சைவ உணவுகளில் தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது: சைவ உணவுகளில் கால்சியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது. மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் போன்றவை கட்டுக்குள் இருக்கும்.

மேலும் இந்நாளில் எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோமா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளி:

சைவ உணவுகளில் பொதுவாக வைட்டமின் சி, டி மற்றும் மினரல்கள் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. குறிப்பாக, தக்காளியில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, சி, கே போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் எடை குறைப்பு வரை பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும். மேலும், இது தோல் பிரச்சனைகளை சரிசெய்து, இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.

பப்பாளி

பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் புரதச்சத்து பல வகையான தோல் நோய்கள் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகள் குறையும். உடலின் ஆற்றலுக்கு புரதச்சத்து மிக அவசியமான ஒன்று. எலும்பு மற்றும் தசைகளின் வலுவுக்கு புரதச்சத்து அவசியம். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

கீரை

கீரையில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. குறிப்பாக, கீரை சாப்பிடும் ஒருவருக்கு, சுவாச பிரச்சனைகளை கட்டுக்குள் இருக்கும். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக, பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் ரத்தசோகை பிரச்சனை குறையும். மேலும், இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

புரதச்சத்து கொண்ட முட்டைக்கோஸ்:

முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, பி2, சி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் சல்பர் ஆகியவை நிறைந்துள்ளன. முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் முடி உதிர்வது குறைந்து, முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் மாறும். இது கண் பார்வையையும் மேம்படுத்துகிறது.

பருப்பு வகைகள் (Lentils) :

பருப்பு வகைகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. பருப்பு வகைகளை பல்வேறு வழிகளில் சமைத்து சாப்பிடலாம். மேலும் குழம்பு, சூப்கள், சாலட்கள் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம்.

கொண்டைக் கடலை (Chickpeas) :

கொண்டைக் கடலையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொண்டைக் கடலையில் புரதம், இரும்பு, ஜிங்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. கொண்டைக் கடலையை குழம்பு வைத்தும், வேகவைத்தும் சாப்பிடலாம். சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!