உலகக்கோப்பை தொடர் : இந்திய அணி அறிவிப்பு!

உலகக்கோப்பை தொடர் : இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசியின் முக்கியத் தொடரான ஒருநாள் உலக கோப்பை தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் அக்.5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.அதன்படி, அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.அந்த உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகின்றன. உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர்.

உலகக்கோப்பை தொடருக்கு 30 நாட்களுக்கு முன்னதாக அணி வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐசிசி கூறியிருந்தது. இதனால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்திய அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர், 4 ஆல் ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பு: அனைத்து அணிகளும் அணியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய செப்டம்பர் 28 வரை அவகாசம் உள்ளது, அதன் பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் ஐசிசியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயமாம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!