உலக மூளைக்கட்டி நாள்!
மூளைக் கட்டிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், மூளைக்கட்டி நோயுற்றவர்களுக்கு ஆதரவு வழங்கவும், மூளைக்கட்டி குறித்த ஆய்வுகளை அதிகரிக்கவும் ஜெர்மனியிலுள்ள Deutsche Hirntumorhilfe எனும் ஜெர்மன் மூளைக் கட்டி சங்கம் 2000 ஆம் ஆண்டில் உலக மூளைக் கட்டி நாளை (World Brain Tumor Day) ஏற்படுத்தியது. இந்நாளில் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துதல், ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் சிறந்த வளங்களுக்காக வாதிடுதல் ஆகியவற்றில் உலகளாவிய முயற்சிகளை ஒன்றிணைப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இந்த நாளைக் குறிக்கும் நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் நிதி திரட்டல்களை ஏற்பாடு செய்கின்றன. மூளைக் கட்டி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இன்றைய நாளில் ஆதரவளிக்கப்படுகின்றன.
சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. . உலக மூளை கட்டி தினமான இன்றைய நாளில் மூளை கட்டி நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய சில முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மூளைக்கட்டி என்றாலே மிகவும் பயப்படும் அளவில் தான் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நமக்கு உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் மூளையில் உருவாகும் அனைத்து கட்டிகளும் மரணம் ஏற்படுத்த கூடியவை அல்ல. பல காரணங்களால் மூளையில் உருவாகும் கட்டிகளில் சிலபுற்றுநோய் கட்டிகளாக இருக்கும்.
மூளைக்கட்டி எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் மூளைக்கட்டி பாதிப்பு இருந்திருந்தால் மரபு ரீதியாக அது வாரிசுகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. உடலுக்குத் தேவையற்ற உயிரணுக்களின் அதிக வளர்ச்சியே புற்றுநோய். மூளை பகுதியிலும் அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சி மூளை கட்டி வடிவத்தில் உருவாகிறது. மூளைக் கட்டி என்பது மூளையில் உள்ள உயிரணுக்களின் தேவையற்ற அல்லது அசாதாரண வளர்ச்சியாகும். இதில் தீங்கு விளைவிப்பது மற்றும் தீங்கற்றது என்ற இருவகை கட்டிகள் உருவாகின்றன. வளர்ச்சியின் தீவிரத்தின் அடிப்படையில், கட்டிகள் தீங்கற்ற கட்டிகள் (புற்றுநோயற்ற, மெதுவான வளர்ச்சி விகிதம், குணப்படுத்தக்கூடியவை) மற்றும் வீரியம் மிக்கவை என வகைப்படுத்தப்படுகின்றன.
கீழ்காண்பவை மூளைக் கட்டிகளின் பொதுவான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளாக இருக்கலாம்:
* அடிக்கடி கடுமையான தலைவலி, குமட்டலுடன் சேர்ந்த தலைவலி, நோயின் அடுத்தடுத்த கட்டத்தில் வாந்தி
* வலிப்பு அல்லது பேசுவதில் சிரமம்
* பார்வை, செவித்திறன், வாசனை, சுவை ஆகியவற்றில் சிக்கல் ஏற்படலாம்
* உடல் உறுப்புகளில் பக்கவாதம்ஏற்படுவது
* நினைவுத்திறனை இழப்பது ஒருங்கிணைப்பு குறைபாடு(coordination difficulty)
* தசை பலவீனம், நடக்கும் போது பேலன்ஸ் இல்லாமல் போவது
கட்டிகளின் அளவு, இருப்பிடம், நிலை மற்றும் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். எனினும் எந்தவொரு அறிகுறிகளையும் ஒருவர் தொடர்ந்து அனுபவிக்க நேரிட்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.
மூளை கட்டியை எப்படி கண்டறிகிறார்கள்?
* நரம்பியல் பரிசோதனைகள் (ஒருங்கிணைப்பு, பார்வை திறன், ஆடியோ / கேட்டல் திறன், பேலன்ஸ் டெஸ்ட்)
* இமேஜிங் பரிசோதனைகள்: MRI ஸ்கேன் மூலம் மொல்லயில் கட்டிகள் இருப்பதை கண்டறியலாம். கட்டிகளின் இருப்பை தீர்மானிக்க பல சிறப்பு MRI ஸ்கேன்கள் உள்ளன. சில நேரங்களில் MRI டெஸ்டின் போது ஒரு சாயத்தை (dye) நரம்பு வழியே செலுத்தலாம். பெர்ஃப்யூஷன் MRI, சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் கம்ப்யூட்டரைஸ்ட் டோமோ டோமோகிராபி (spect) உள்ளிட்ட பல வழிகள் மூலம் மூளை கட்டிகள் கண்டறியப்படுகின்றன.
* பயாப்ஸி: அசாதாரண திசுக்களின் மாதிரியை எடுத்து சோதித்தல்
சிகிச்சைகள்
நோயறிதலுக்கு பின் குறிப்பிட்ட கட்டி தீங்கற்றது என்று மருத்துவர்கள் கண்டறிந்தால், சில குணாதிசயங்களை பொறுத்து, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதை முழுவதுமாக அகற்றலாம் அல்லது சில நரம்புகளைப் பாதுகாக்க விட்டுவிட்டு மருந்துகளை சிகிச்சையாக மேற்கொள்ளலாம். அதுவே வீரியமிக்க கட்டிகளாக இருந்தால், சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. அவை
* அறுவை சிகிச்சை
* கீமோதெரபியுடன் கதிரியக்க சிகிச்சை
* கீமோதெரபி இல்லாமல் கதிரியக்க சிகிச்சை