வாட்ஸ் அப் & இன்ஸ்டா முடங்கியது ஏன்? இது வரை பதிலில்லை!

வாட்ஸ் அப் & இன்ஸ்டா முடங்கியது ஏன்? இது வரை பதிலில்லை!

வாட்ஸ்அப் செயலி முடக்கம் குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் அந்நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கப்பட வில்லை.

சர்வதேச அளவில் முன்னணி சமூக வலைதளங்களாக உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை மூலம் செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது.

இந்த வாட்ஸ் அப் செயலியில் அடிக்கடி ஹேக்கர்கள் ஊடுருவுவது, தனியுரிமை மீறுதல் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி வருவதால், பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இதனால், அடிக்கடி அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 19) நள்ளிரவு திடீரென செயலிழந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி கணினியில் இவை செயலிழந்தன. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம்  பொறுமையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி என மட்டும் சொல்லி  இருந்தார்கள்.

 

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் செயல்படாத காரணத்தால், ட்விட்டர் பக்கத்தில் #WhatsappDown, #FacebookDown உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. மேலும், பல்வேறு மீம்ஸ்களும் பகிரப்பட்டு வந்தாலும் 45 நிமிடங்கள் முடங்கியதன் காரணத்தை நிர்வாக தரப்பில் இருந்து இதுவரை சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியம். .

error: Content is protected !!