கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘மாயா’. இந்த படத்தன் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் உருவாகும் ‘கனெக்ட்’ படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தை ‘மாயா’ இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள கனெக்ட் படம் குறித்து டைரக்டர் அஸ்வின் சரவணன் சில சுவாரஸ்யமான தகவல்களை  பகிர்ந்துள்ளார். அவை இதோ:

“மாயா திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவை முதலில் சந்தித்தபோது எனது அனுபவம் குறித்து கேட்கவில்லை. படத்தின் கதையை கேட்ட பின்னர் உடனே ஒத்துக்கொண்டார். முதலில் நான் நயன்தாரா மாயா படத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என நினைத்தேன் ஆனால் அதற்கு மாறாக அவர் ஒத்துக் கொண்டு சிறப்பாக நடித்தும் கொடுத்தார். நடிகையான நயன்தாரா ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. மிகவும் ஒத்துழைப்போடும், அக்கறையோடும் நடித்து கொடுத்தார். ஒரு விஷய்ம் தெரியுமா? இந்த கனெக்ட் படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. பார்வையாளர்களை கவர வைக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்ததற்கான காரணம்

அது போக நான் படம் எடுக்க துவங்கும் போது எனது முந்தைய படங்களுக்கு பொருத்தமாக இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு பொருத்தமாக அமையுமா என்பதை பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. எனது உள்ளுணர்விற்கு ஏற்றபடியே நான் படத்தை நகர்த்துவேன். இந்த படத்தின் கதை பற்றி நான் நயன்தாராவிடம் கூறியவுடன் அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். என்னுடைய மற்ற படங்களை விடவும் பிரமாண்டமாக இருக்கும் என்று யோசித்து எல்லாம் இதை தொடங்கவில்லை. படத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் விஷயங்களை பற்றி மட்டுமே யோசித்தேன். கொரோனா லாக்டவுன் சமயத்தில் நான் அனுபவித்த சில விஷயங்களை இந்த திரைப்படத்தில் சேர்த்துள்ளேன்” என்றார் அஷ்வின்.

மேலும் அவர் கூறுகையில் ” பேய்ப்படங்கள் நிறைய வந்திருக்கின்றன அவற்றிலிருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்தோம். அந்தக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதை. இதுவரை நேரில் வந்து பேய் ஓட்டும் சாமியார்களைப் பார்த்திருப்போம், இந்தப் படத்தில் இணையம் மூலம் பேயுடன் உரையாடும் விசயம் புதிதாக இருக்கும். இந்திநடிகர் அனுபம்கெர் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் இந்தப்படத்தில் நடித்ததும் படத்தைப் பாராட்டியதும் மறக்க முடியாதது.

எந்த ஒரு அழுத்தமும் எடுத்து கொள்ளாமல் ஒவ்வொரு படத்தையும் புதிய படம் போலவே நினைத்து அதை எப்படி சுவாரஸ்யமாக, கிரியேட்டிவாக உருவாக்குவது என்பதை மட்டுமே ஆராய்ந்து செய்வது தான் பெரிய சவால். மேலும் நான் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என யோசிப்பதில்லை. என்னுடைய கதைக்கு பொருந்த கூடிய வகையில் மட்டுமே முடிவு செய்கிறேன். லாக்டவுன் சமயத்தில் எதிர்காலத்தை பற்றியும், அந்த நிலைமையில் எனக்கு இருந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையையும் உணர்ச்சிகளையும் நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைத்தேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்த தகுந்த ஜானர் திகில் திரைப்படங்கள் என்பதை உணர்ந்ததால் தான் இப்படத்தை உருவாக்கினேன் என அவர் தெரிவித்தார்..

அத்துடன் இந்த கனெக்ட் திரைப்படத்தில் முன்னரே சொன்னது போல் அனுபவமிக்க நடிகர்களான அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்தது ஒரு பெரிய பாக்கியமாக இருந்தது. ஒரு படம் பண்ணும் போது நீங்கள் யார்? என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை கொள்ள தேவை இல்லை. படத்தின் ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் அதை விரும்புவார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அதிலும் திகில் திரைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என்றும் சொன்னார்

error: Content is protected !!