விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!- வீடியோ!

விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்!- வீடியோ!

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு, கடந்த 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு, விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக இன்று துபாய் சென்றார். லண்டனில் உள்ள பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக, துபாய் செல்கிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த பரிசோதனையின் அடிப்படையில் அவர் துபாயில் இருந்து சிகிச்சை பெறுவதா? அல்லது லண்டன் சென்று பயிற்சி மேற்கொள்வதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் துபாய் சென்றனர்.

error: Content is protected !!