வேலம்மாள் – விஜய் டிவியில் புத்தம் புதிய காவியத் தொடர்!

வேலம்மாள்  – விஜய் டிவியில் புத்தம் புதிய காவியத் தொடர்!

தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒரு காவியத் தொடர் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஸ்டார் விஜய் வெற்றித் தொடர்களையும் விதவிதமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் வரிசையில் ஒரு பிரம்மாண்ட காவியத் தொடர் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழக மக்களின் மனம் கவர்ந்த ஸ்டார் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி, மௌனராகம் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மனதை கொள்ளை கொள்ளும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளாக பிக்பாஸ், குக் வித் கோமாலி போன்ற நிகழ்ச்சிகள் நேயர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாகும். அந்த வரிசையில் தற்போது வேலம்மாள் என்ற புத்தம் புதிய காவியத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இதன் கதை:

நம் நாட்டின் பாரம்பரியம் எப்போதும் வீரர்களை போற்றி பெருமிதம் கொள்வதாகும். அவ்வாறான ஒரு பெருமைமிக்க போர் வீராங்கனையான வேலம்மாள் என்ற இளவரசியின் கதைதான் இது. கதை வேலம்மாளைச்ச் சுற்றி வருகிறது. முழு ராஜ்யமும் ஒரு ஆண் குழந்தைக்காக, சிம்மாசனத்தின் வாரிசிற்காக எதிர்பார்த்திருந்தபோது, ​​ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த அரண்மனையே திகைப்பில் மூழ்குகிறது. அந்த பெண் குழந்தைதான் வேலம்மாள். அவள் தன் தந்தையின் துரதிர்ஷ்டத்திற்குதான் காரணம் என்று நம்புகிறாள், ஆனாலும் அவள் தந்தையான அரசனின் அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்குகிறாள். குடும்பத்தால் அவளுக்கு நடனம் மற்றும் இசையில் பயிற்சியளிக்கப்பட்ட போது, ​​போர் மற்றும் வாள் விளையாட்டின் கலை மற்றும் திறன்களை வேலம்மாள் ரகசியமாக விவேகத்துடன் கற்றுக் கொள்கிறார். அத்துடன் அவள் அந்த ராஜ்யத்திற்காக தன்னை அர்பணித்துக் கொள்கிறாள். இப்படியாக வேலம்மாள் எதிர் கொள்ளும் போராட்டங்களையும் விளைவுகளையும் இந்த கதை வெளிப்படுத்துகிறது. ஒரு வழியாக வேலம்மாள் அரசரின் அன்பையும் வென்று ராஜ்யத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற முடிகிறதா என்பது மீதமுள்ள கதை.

தமிழ் தொலைகாட்சி வரலாற்றில் இது போன்ற ஒரு பிரமாண்ட காவியத் தொடர் கண்டதில்லை என்று வியக்கும் அளவிற்கு வேலம்மாள் தொடர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் நடித்திருப்பவர் நடிகை அம்பிகா, நடிகர் விக்னேஷ், ஓ.ஏ.கே. சுந்தர், மௌனராகம் புகழ் கிருத்திகா (சக்தி), தாமிரபரணி பானு, ரம்யா, ரேஷ்மா, ராம்ஜி, கராத்தே ராஜா மற்றும் பலர்.

இந்த தனித்துவமான தொலைக்காட்சி நாடகமான வேலம்மாள் ஏப்ரல் 12 முதல் திங்கள் முதல் சனிக்கிழமைவரை மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்.

error: Content is protected !!