முறைகேடாக நடந்தால் விமானத்தில் பறக்க 2 ஆண்டு தடை!

முறைகேடாக நடந்தால் விமானத்தில் பறக்க 2 ஆண்டு தடை!

விமான ஊழியர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதாவது விமானப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் பயணிகள் தொடர்பாக விமானி புகார் அளித்த பி 30 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்ட நபர்மீது ஏர் இந்தியா அதிகாரிகள் குழு விசாரணை நடத்த வேண்டும். அப்போது, அந்த குற்றத்துக்கு தகுந்தவாறு அவர் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

விமான பயணிகளை திட்டுதல், அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 3 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.

விமான ஊழியர்களை, பயணிகளை தாக்குதல் பேன்ற செயல்களில் ஈடுபட்டால் 6 மாதங்கள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும்.

விமானத்தை சேதப்படுத்தல், கொலை மிரட்டல் விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!