பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் – 1948ல் நடந்ததன் குறிப்புகள்! பாகம் 1

Uniform Civil Code இந்த பொருளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு முன்பே ,, அரசமைப்புச் சட்டம் உருவாகும் நிலையிலேயே விவாதம் நடைபெற்றதைக் கவனிக்க வேண்டும்.. அடிப்படை உரிமை களை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்திட வேண்டுமெனும் எண்ணத்தில் நமது அரசியல் சாசன நிர்ணய சபையில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 30 ஆகஸ்ட் 1947 நடைபெற்ற விவாதத்தில் கருத்துகள் விவாதிக்கப்பட்டன.. 23 நவம்பர் 1948 அன்று அரசியல் சாசன நிர்ணய சபையில், மதராஸ் மாஹாணத்திலிருந்து உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாஹிப், Uniform Civil Code கொண்டு வருவனை எதிர்த்து ஒரு சட்ட முன் வடிவினை முன் மொழிந்தார்.
மேற்கு வங்கத்திலிருந்து உறுப்பினரான சுரேஷ் சந்திர மஜும்தார் இந்த முன் மொழிவினை எதிர்த்தார்.. ஆனால் இஸ்மாயில் சாஹிப் சொல்வதனை ஏற்க வேண்டும் என இன்னுமொரு உறுப்பினர் நஸ்ரூதின் அகமது வலியுறுத்தினார்
இந்த நிலையில் உறுப்பினர் மொஹபூப் அலி பெய்க் ஷாகிப் பகதூர், சபையின் கவனத்தினை ஈர்க்கும் வண்னம் சில கருத்துகளை முன் வைத்து பேசினார். ,
ஏற்கனவே ப்ரிட்டிஷார் ஆட்சியில் Civil Procedure Code தனி மனிதனின் மதம் சார்ந்த நம்பிக்கை களிலே தலையிட்டு அதனால் மத நம்பிக்கைகளுக்கு இடர் வந்திருப்பதாகவும் இப்போது இப்படி பொதுவான சிவில் சட்டம் கொண்டு வந்தால் மத நம்பிக்கைகள் அதனைக் கைக்கொள்வதிலும் இடர் தொடரவே செய்யும் என உரை செய்தார்
As far as the Mussalmans are concerned, their laws of succession, inheritance, marriage and divorce are completely dependent upon their religion என்பதாக அவர் உரையினை நிறைவு செய்யும் போது உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் குறுக்கிட்டு ஒரு கருத்தை சொன்னார்
மேற்கண்ட அலி பெய்க் சாஹிப் பகதூரின் உரை நிறைவுக்கு அனந்த சயனம் அய்யங்கார் : It is a matter of Contract என்பதாக ஒரு கருத்தை சொல்லி இடை மறித்தார். இதனை அலிபெய்க் சாஹிப் பகதூர் எதிர்பார்த்திருந்தார் போலும்.. “எனக்கு நன்றாகத் தெரியும், நமது அனந்தசயனம் அய்யங் கார் அவர்களுக்கு பிற மதத்தினரின் சட்டங்களைப் பொறுத்தவரை எப்போதுமே queer ideas வைத்திருக்கிறார்.. ஹிந்துக்களையும் ஐரோப்பியர்களையும் பொறுத்தவரை, சம்சார பந்தம் என்பது ஒரு ஸ்டேட்டஸ் அதாவது ஒரு நிலை.. ஆனால் ஆனால் கான்ட்ராக்ட் என அனந்தசயனம் அய்யங்காரால் வருணிக்கப்பட்ட சம்சார பந்தம் என்பது இஸ்லாமியருக்கு குரான் வழியிலானது.. அதனை நிறைவேற்றாத நிலையில் அது செல்லாததாகிவிடுகிறது
1350 வருடங்களாக முஸ்லிம்கள் ஒரு சட்டத்தினை கைக்கொண்டு வருகின்றார்கள்.. அதனை அந்த அந்த நிலையில் சர்க்கார்கள் ஒப்புக் கொண்டிருந்திருக்கின்றனர்.. இன்றைக்கு வந்து அனந்தசயனம் அய்யங்கார் , நாங்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்ற மாதிரி திருமணம் போன்றவற்றிற்கு பொது வானதொரு சட்டம் கொண்டு வருகிறேன் என்று சொல்வாரேயானால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.. இது மிகச் சாதாரணமான சங்கதி இல்லை. இஸ்லாம் என்று மட்டும் இல்லை.. இன்னும் சில மதங்களில் கூட personal Law என்பது அவர்களின் மத நம்பிக்கைகள் சார்ந்ததாகவே இருக்கிறது.. அப்படியான மத நம்பிக்கைகளைக் பின்பற்ற இந்த பொது சிவில் சட்டம் இடைஞ்சலாகி விடக் கூடாது.
இந்த நிலையில் மற்றொரு உறுப்பினர் க்ருஷ்ணசாமி பாரதி குறுக்கிட்டு, இப்படி ஒரு பொது சிவில் சட்டம், எல்லாருடைய ஒப்புதலுடன் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அன்றைய தினம் அவை அரசியல் சாசன நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஹெச் சி முகர்ஜி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது
அவர் , ” மிஸ்டர் க்ருஷ்ணசாமி பாரதி.. என்னுடைய ஆசை. இது தான்.. பெரும்பான்மை சமூகத் தினர் கருத்துகளை சொல்லுமிடத்து.. சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் கருத்துகளையும் சொல்ல வேண்டும்.. இந்த அவையில் நமது இஸ்லாமிய சகோகதரர்கள் மனம் திறந்து கருத்துகளை சொல்ல வேண்டும்”
க்ருஷ்ணசாமி பாரதி , ” அவைத் தலைவருக்கு என் வணக்கம்.. நான் சொல்ல வந்தது என்னவெனில் இந்த அவையில் நிறைவேற்றம் காணப்படும் எதுவும் எல்லோருக்கும் சம்மதமானதாக இருக்க வேண்டும் ” என்பதே
மீண்டும் அலிபெய்க் சாஹிப் பகதூர் தொடர்ந்தார், ” அவைத் தலைவர் அவர்களே, நான் சிலரிடம் கவனிக்கிறேன்.. அவர்கள் செக்யூலர் அரசாங்கம் என்பது எல்லா மதத்தினரும் ஒரே சிவில் சட்டத்தைக் கைக்கொள்வது என நினைக்கின்றனர்.. அதாவது எல்லா மதத்தினரும் அவரவர் தினசரி வாழ்க்கை , மொழி, கலாச்சாரம் , பெர்சனல் சட்டங்கள் இதெல்லாம் அந்த “பொது சிவில் சட்டம்” மூலமாகவே நடைபெற வேண்டும் என நினைக்கின்றனர்.. ஆனால் அதல்ல செக்யூலர் சர்க்கார் ஆனால் அந்தந்த மதத்தினருக்கு அவரவர் மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழ்வு நடத்திட ஏதுவானதே நிஜமான செக்யூலர் சர்க்கார்.. அதைச் செய்வதே சிறந்த பொது சிவில் சட்டம் ”
இன்னும் சில இஸ்லாமிய உறுப்பினர்கள் அலிபெய்க் சாஹிப் பகதூர் சொல்வதை சபை ஏற்க வேணும் என குரல் தந்தனர்
பிஹார் பகுதியின் உறுப்பினர் ஹுசைன் இமாம் குறுக்கிட்டு , ” இந்த பெரிய நாட்டிலே ஒரு பகுதியிலே மழை கொட்டியபடி இருக்கிறது.. இன்னொரு பகுதியில் வறட்சி .. இப்படியான வேறுபாடுகள் கொண்ட தேசத்திலே பொது சிவில் சட்டம் எப்படி சாத்தியம்”என்பதான கேள்வியையும் கேட்டு வைத்தார்
அது மட்டுமல்ல சபையில் வேண்டுகோள் ஒன்றினையும் வைத்தார் ..”இந்த சூழல் மிகவும் சோதனையானது தான்.. பல்வேறு மதம், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், இன்னும் எவ்வளவோ வேறுபாடுகள் கொண்ட சமூகச் சூழல்கள் கொண்ட நம் நாட்டில், அனைவரும் மனமுவந்து ஒரு பொது சிவில் சட்டத்தினை ஏற்பது மிகவும் கடினம்.. ஆனால் இந்த சூழலில் நமது அரசமைப்புச் சட்டத்தினை வரைவு செய்யும் நமது உறுப்பினர்கள் இதற்கு தக்கதொரு தீர்வினைத் தர இயலும் என்று நான் நினைக்கிறேன்.. மிகக் குறிப்பாக வரைவு கமிட்டியின் தலைவரான சகோதரர் அம்பேத்கர் அவர்கள் இதற்கு நல்ல தீர்வு தர வல்லவர் என்று நம்புகிறேன்”.
ஹுசைன் இமாம் பேசி அமர்ந்த பின் சபையில் சில நிமிஷங்கள் ஆழ்ந்த நிசப்தம்.. எல்லோரும் அம்பேத்கர் என்ன சொல்லவிருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமானர்கள்..
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என வரும் நாட்களில் உலகம் அழைத்து மகிழ்ந்த அண்ணல் அம்பேத்கார் அவையில் இருக்கின்றாரா எனத் தெரிந்து கொள்ள் சில உறுப்பினர்கள் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.
அவர் அவையிலே தான் இருந்தார்.. எப்போதும் போல அமைதியாக இருந்தார்.. அவர் பக்கத்திலே அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அவரை கூடுதல் ஆர்வத்துடன் , “ம் எழுந்திருங்கள் .. நான் உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்” என்ற கருத்தினை தங்கள் பார்வையாலே அவர்பால் செலுத்திப் பார்த்தார்கள்
..
அந்த மிக விசாலமான பெரும் அரங்கிலே ஆங்காங்கே உறுப்பினர்கள் தங்கள் குறிப்புதவிக் காகிதங்களை புரட்டும் போது உண்டான சின்ன சப்தம், மின் விசிறிகள் வேகமாக ஒடும் போது உண்டாகும் காற்றின் சப்தம் இவை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது
மொத்த சபையும் அம்பேத்கரின் பேச்சுக்காகக் காத்திருந்தது.
(தொடரும்)