பிரிட்டனில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 4.8 உயர்வு: காரணம் கொரோனா!
இதுவரை எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் பிரிட்டனில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பிறபிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கு வேலையிழப்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வந்தது. இதனிடையே பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய மானியங்களை வழங்கியதோடு பிரிட்டன் அரசு ஊரடங்கு தளர்வுகளையும் அறிவித்தது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு தொழில்கள் பாதிப்பை சந்தித்துள்ளதோடு பொருளாதாரமும் வரலாறு காணத சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில் இல்லாத வகையில் வேலையிழப்பு பிரச்சனையை பிரிட்டன் சந்தித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 3 மாதங்களில் பிரிட்டனில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 4.8% அதிகரித்துள்ளது. இருப்பினும் இது கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பை விட 3.7% குறைவு என தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பரவல் காலங்களில் சுமார் 7,82,000 பேருக்கு சம்பளம் தடைப்பட்டது. ஊரடங்கால் ஏற்பட்ட வணிக முடக்கம் உணவகங்கள் மூடல் உள்ளிட்டவையே வேலை யிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ள பிரிட்டன் கருவூலத் தலைவர் ரிஷி சுனாக், இந்த கடினாமான நேரத்தில் வேலையை இழப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் உறுதியளிக்கிறோம் வரும் காலங்களில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.