இளைய தளபதியின் எதிர்காலத்துக்கு நல்லது இதுதான்….!
தமிழ்நாட்டில் பைத்தியங்கள் சூழ் அரசியல்வாதிகளோடுதான் நாம் இன்னமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு கோமாளித்தனமான அப்பன், மகன் அறிக்கையே ஒரு சான்று.
என்னைய்யா நடக்குது உங்க வீட்டுக்குள்ளே?
திடீர்னு அப்பா தன்னுடைய பையனின் பெயரால் கட்சி ஆரம்பித்து விட்டேன் என்று ஒரு அறிக்கை விடுகிறார் அது வெளியாகி ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு உள்ள மகன் எனக்கு அதற்கு சம்பந்தம் இல்லைன்னு சொல்லி பதில் வருது!
அதை தொடர்ந்து அவருடைய பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் ‘இது போல, இந்த கட்சியையோ கட்சியின் பெயரால் எங்கள் தளபதியின் பெயரை இணைத்து யாராவது ஏதாவது லாபம் தேடினால், அவர் மேல் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று மொட்டை கடுதாசி போல ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறார்கள்!
இது ஒருபுறமிருக்க வழக்கம் போல நம்முடைய சூப்பர் கிழவர் தன் பங்குக்கு ஆன அறிக்கையை வெளியிட்டு விட்டார். அதாவது அந்த அறிக்கையில் இருக்கக் கூடிய தன் உடல் சம்மந்தப் பட்ட நோய்கள் சரிதானாம்…. ஆனால் அதை அவர் சொல்லி எழுதலையாம்…. எங்கேயோ லாஜிக் உதைக்கிறது இல்லையா? ‘இந்த மாதிரி எழுதி விட்டு நடக்கிறதை தள்ளி நின்னு வேடிக்கை பாரு’ன்னு யாரோ பின்புலத்திலிருந்து இயக்குகிற மாதிரி தோன்றவில்லை உங்களுக்கு?
இனி சோ கால்ட் இளைய தளபதி மேட்டருக்கு வருவோம்… மிஞ்சிப்போனால் 45 வயசிருக்குமா? மோகன்லால், மம்முட்டி, ரஜினி, கமல் போல இன்னும் 25 வருடங்கள் சௌகர்யமக நடித்து வருஷத்திற்கு இரண்டு படம், 80 கோடி வருட வருமானம் என சுகமாக வாழ்வதை விட்டு விட்டு, யார் சொல்வதையோ கேட்டு, அரசியலில் இறங்கி, பாக்யராஜ், ராஜேந்தர், விஜயகாந்த், சரத் குமார், கமல் போல அனைத்தையும் இழக்கும் அளவிற்கு விஜய் அறிவிலி இல்லை.
இன்றைய மா.செ. கூட்டத்தில் அநேகமாக தன் தந்தைக்கு தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு கட் அவுட், பாலாபிஷேகம் செய்யக் கிளம்பி விடுவதே இளைய தளபதியின் எதிர்காலத்துக்கு நல்லது….!
செய்வாரா? அவர் செய்வாரா??