பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரலில் இந்தியா வருகை!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரலில் இந்தியா வருகை!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த/, ஜனவரி மாதம் குடியரசு தின விழாவிற்கே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவிருந்தார். இருப்பினும், அப்போது உருமாறிய கொரோனா பரவல் காரணமாகப் பிரிட்டன் நாட்டில் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரித்தது. இதனால் பிரிட்டன் நாட்டின் நிலைமையைக் கண்காணிக்க அவர், தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்திருந்தார். இப்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் இந்தியா வரவுள்ளதாக பிரிட்டன் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

ஏகப்பட்ட முயற்சிக்கு பின்னர் பிரிட்டன் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர், போரிஸ் ஜான்சன் பிரிட்டன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்த அதுவும் குறிப்பாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் பெரிய முதல் சர்வதேசப் பயணம் இதுவாகும்.

பிரெக்ஸிட் வெளியேறுதலுக்குப் பின்னர் பிரிட்டன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்த, குறிப்பாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 11 பசிபிக் ரிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய-பசிபிக் சுதந்திர வர்த்தக தொகுதியான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரிட்டன் கடந்த மாதமே விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. அதேபோல் ஏசியன் கூட்டமைப்பில் ஆலோசகராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

error: Content is protected !!