மாஸ்க் அணியாவிட்டல் அபராதம்_ தமிழக அரசு புது உத்தரவு முழு விபரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தினமும் 500க்கு குறைவாக இருந்த சராசரி பாதிப்பு தற்போது மீண்டும் 800 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.குறிப்பாக, சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமை செயலர் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், டிஜிபி, கூடுதல் தலைமை செயலர், வருவாய் துறை ஆணையர், முதன்மை தேர்தல் அலுவலர், முதன்மை செயலாளர்(பொது, சுகாதாரம்) தமிழக மருத்துவ பணிகள் கழகம், மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஷ் கமிஷனர் பொது சுகாதார துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு முழு விபரம் இதோ: