ஏர் கண்டிஷனிங் பஸ் சர்வீஸ்!- இந்தியாவில் தொடங்க ஊபர் பிளான்!

ஏர் கண்டிஷனிங் பஸ் சர்வீஸ்!- இந்தியாவில் தொடங்க ஊபர் பிளான்!

உலகின் பல நாடுகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஊபர் செவை அடுத்தடுத்த நிலையை நோக்கி பயணம் செய்கிறது. அந்த வகையில் அமெரிக்கா உள்ளிட்ட மேல் நாடுகளில் வான் ஊர்தி சேவையை ஆரம்பித்து விட்ட இந்நிறுவனம் நம் நாட்டி; கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள், போட்களை தொடர்ந்து ஏர் கண்டிஷனிங் வசதியுடன் கூடிய பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Uber நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் இது தொடர்பாக கூறுகையில், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்று இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்குள் ஏசி பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் இதற்காக பொதுமக்களின் வேலைநிமித்தமான போக்குவரத்து நிரம்பிய வழித்தடங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்த பேருந்துகளில் பயணிகள் தங்களின் இருக்கையை தியேட்டர்களில் தேர்ந்தெடுப்பது போன்றே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமாம்.

6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் கால்பதித்த உபர் நிறுவனம், ஆரம்பத்தில் அதிகள விலான சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது வழக்கமான கட்டணங்களையே வசூலித்து வருகிறது. அதனாலேயே இந்தியாவில் மிகவும் பிரபலமான டாக்சி நிறுவனங்களில் ஓன்றாக திகழும் ஊபர் நிறுவனம், சமீபத்தில் உணவு டெலிவரி வணிகத்திற்குள் இறங்கி கலக்கியது மட்டுமில்லாமல் தனக்கென முன்னணி இடத்தை தக்க வைத்தது.தொடர் வெற்றிகளை தொடர்ந்து ஊபர் நிறுவனம் தற்போது மகாராஷ்டிரா மாரிடைம் போர்டு உடன் இணைந்து படகு சவாரி செய்யும் புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளது போல் பேருந்து சேவையை ஆரம்பிக்க முடிவு செய்து உள்ளது.

அதே சமயம் இது போன்ற பேருந்து சேவை இந்தியாவுக்கு புதுமை இல்லை, முன்னதாக கடந்த 2015ல் இது போன்ற சேவையை ஓலா நிறுவனம் டெல்லி, தேசிய தலைநகர் பகுதி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் Shuttle என்ற பெயரில் இயக்கி வந்தது. இந்த முயற்சியில் ஓலா நிறுவனம் வெற்றி பெறாத நிலையில் தற்போது உபர் நிறுவனம் இதில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!