தமிழ் குரல் / AI Voice
உலகளவில் தன்னை பெரியண்ணா என்று கருதிக் கொள்ளும் அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டி யிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்ததுடன் அதற்கான பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை டொனால்ட் டிரம்ப் நேற்று முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார்.
சுமார் 20,000 பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், ”நாம் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம். மீண்டும் ஒருமுறை அதை செய்து காட்டுவோம். இம்முறை நம் பணியை முடித்துக்காட்ட இருக்கிறோம்” என்று கூறினார்.
“நம் பொருளாதாரத்தை கண்டு உலகமே பொறாமை கொள்கிறது. அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெறச்செய்வோம். இதுவரை இல்லாத அளவிற்கு சிறந்த நாடாக ஆக்குவோம். என் ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால், இரண்டா வது முறையாக மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்குவார்கள்” என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
