தட்டச்சு எனப்படும் டைப்பிங் தினமின்று!

தட்டச்சு எனப்படும் டைப்பிங் தினமின்று!

இது முதன்முதலில் 2011 இல் கொண்டாடப்பட்டது. முன்னர் எழுதப்பட்ட தகவல்தொடர்பு மூலம் மக்கள் தங்களை வெளிப்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

கணினிகள் பெருகுவதற்கு முன்பு தட்டச்சு எந்திரங்கள்தான், தகவல்களை எளிதாக காகிதத்தில் அச்சடிக்கவும், ஆவணங்களை பதிவு செய்யவும் பயன்பட்டன. தட்டச்சு எந்திரங்களில் திரைகள் கிடையாது. விசைகளை அழுத்தினால் அது மை கொண்ட பெல்ட்டில் அழுத்தம் கொடுத்து, எழுத்தை காகிதத்தில் பதிக்கும். இதுவே அரசு ஆவணங்கள் முதல் தனிநபர் தகவல் பரிமாற்றத் திற்கும் பயன்பட்டது. இப்போது தட்டச்சு கருவிகள் காட்சிப் பொருளாகிவிட்டன. இருந்தாலும் கணியின் கீபோர்டுகள் எப்போதும் தட்டச்சு கருவியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் டைப்ரைட்டர் எனப்படும் தட்டச்சு நாளின்று

சுமார் 200 ஆண்டுகள் உலகத்தையே ஆதிக்கம் செலுத்திய மெஷின்தான் டைப்ரைட்டர். அந்தடைப்ரைட்டரின் அடுத்த பரிமாணம்தான் வேர்ட் பிராசசர். அப்புறம் கம்ப்யூட்டர். ஆனால் கீபோர்ட் அதே க்வெர்ட்டி (Qwerty) கீபோர்ட்தான்

அதில் ந்த எழுத்துகளை அதிகம் பயன்படுத்துகிறோம் என்ற ஆராய்ச்சியின் அடிப்படையில் கீபோர்ட் உருவாக்கப்பட்டது. 1575லிருந்து இத்தாலியில் பலர் டைப் ரைட்டர் மெஷின்களை விதவிதமாக உருவாக்கினார்கள். கடைசியில் 1867இல் பத்திரிகை ஆசிரியர் கிறிஸ்டோஃபர் ஷோல்ஸ் தான் இப்போதும் இருக்கும் டைப்ரைட்டரையும் க்வெர்ட்டி கீபோர்டையும் உருவாக்கினார். சுண்டு விரல் முதல் ஆள் காட்டி விரல் வரை ஒவ்வொரு விரலுக்கும் இன்ன எழுத்து என்ற முறையில் அடிக்க வேண்டும். சும்மா கீபோர்டைப் பார்த்துக் கொண்டு இரு ஆள்காட்டி விரல்களால் அடிக்கக் கூடாது. அப்போது ஸ்பீட் வராது. டைப்பிங் கற்றுத்தருவதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு பயிற்சி நிலையம் முன்பு உண்டு. இப்போதும் ஒரு சில இருக்கின்றன. போய் கற்றுக் கொண்டால், கம்ப்யூட்டரிலும் ஸ்பீட் கிடைக்கும்.

பேனா எடுத்து கையால் எழுதினால் ஒரு நிமிடத்தில் இருபது சொற்கள் வரை எழுதலாம். ஒரு திறமையான டைப்பிஸ்ட் நிமிடத்துக்கு 50 சொற்கள் அடிப்பார். உலக சாதனை நிமிடத்துக்கு 215 சொற்கள் .அரசியல்வாதி, அமைச்சராக ஆன ஒரு டைப்பிஸ்ட் தமிழ்நாட்டில் உண்டு தி.மு.க. பொருளாளர், அமைச்சராக எல்லாம் இருந்த ஆற்காடு வீராசாமி மின்சார வாரியத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்தவர். ஆங்கில டைப்பிங், தமிழ் டைப்பின் இரண்டிலும் தமிழ்நாட்டில் ஸ்பீடில் முதல் இடத்தை வென்றவர்

மேலும் இந்த தட்டச்சு கருவி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாமா….

* கார்லஸ் கிளைடன் மற்றும் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் ஆகியோர் 1868 ஜூன் 23-ம் தேதி பொது வர்த்தகப் பயன்பாட்டிற்கு ஏற்ற முழுமையான தட்டச்சு கருவிக்கு காப்புரிமம் பெற்றனர். அதற்கு முன்பு ஹென்றிமில் என்பவர் 1714-ல் முதன் முதலில் தட்டச்சு கருவியை தயாரித்து காப்புரிமம் பெற்றார். ஆனால் அவர் தயாரித்த மாதிரியில் தட்டச்சு கருவிகள் உற்பத்தி செய்யப்படவில்லை. அவருக்குப் பின்னர் பலர் தட்டச்சு கருவிகள் உருவாக்கினர். அவற்றில் இருந்த குழப்பங்கள், மாறுபட்ட அம்சங்கள் அவற்றை பிரபலமாக்கவில்லை.

* டைப்ரைட்டர் கருவியில் உள்ள விசைப்பலகைக்கு குவர்ட்டி (Qwerty) விசைப்பலகை என்ற பெயர் உண்டு , Qwerty என்ற எழுத்துகள் மேல் வரிசையில் வரிசையாக அமைந்திருப்பதைக் கொண்டு இந்த பெயர் ஏற்பட்டது.

* 1873-ல் குவர்ட்டி விசைப்பலகை அறிமுகமானது. எழுத்துகளை வேறுவேறு இடங்களில் அமைக்காமல் இந்த வரிசையில் அமைப்பது தட்டச்சு செய்ய சுலபமாக இருப்பதாக கருதி இந்த வரிசையில் எழுத்துகள் அமைப்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* இன்று தட்டச்சு கருவியிலும், கணினியிலும் ஒரே மாதிரியில் விசைப்பலகை (கீபோர்டு) உள்ளது, ஆரம்ப காலத்தில் தட்டச்சு கருவிகளில் ஒவ்வொரு கருவியிலும், ஒரு எழுத்து வெவ்வேறு இடத்தில் அமைந்திருந்தன. இதனால் பொதுவான குவர்ட்டி விசைப்பலகை ஏற்கப்படும் முன்பு தட்டச்சு தேர்வுகளோ, போட்டிகளோ நடைபெறவில்லை.

* ஆரம்ப காலத்தில் தட்டச்சுப் பலகையில், தட்டச்சு செய்பவர் காகிதத்தின் ஓரத்திற்கு வந்துவிட்டார் என்பதை தெரிவிக்க இறுதிப் பகுதியை நெருங்கும் முன்பு லேசான மணியோசை எழுப்பி எச்சரிக்கும் முறை இருந்தது.

* தட்டச்சு கருவிகளில் பொதுவாக காகிதங்களை கைகளால் சொருகி தட்டச்சு செய்ய வேண்டும், பக்கம் நிறைவடைந்தால் கைகளால்தான் பக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

* தட்டச்சு எழுத்துகளில் தவறு நேர்ந்தால் கணினிகள்போல அழித்து, அடித்து திருத்த முடியாது. தட்டச்சு தவறுகளை அழிப்பதற்காக பிரத்தியேக அழிக்கும் ரப்பரும், பூசும் திரவமும் இருந்தன.

* தாமஸ் எடிசன் 1870-ல் மின்சார தட்டச்சு கருவியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். இதில் தூரத்தில் இருந்தபடி ரிமோட் மூலம் தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* தட்டச்சு செய்வதில் இடது கையைப் பயன்படுத்தி மட்டுமே தட்டச்சு செய்யும் மிகப்பெரிய வார்த்தை stewardesses.

*Typewriter என்ற வார்த்தையை தட்டச்சுப் பலகையில் ஒரே வரிசையில் (மேல் வரிசையில்) உள்ள எழுத்துக்களை பயன்படுத்தி அடிக்கிறோம் என்பது ஆச்சரியமான உண்மை.

* Skepticism (ஸ்கெப்டிசிஸ்ம்) என்ற வார்த்தை தட்டச்சுப்பலகையில் ஒவ்வொரு எழுத்துக்கும் கைகளை மாற்றி மாற்றி தட்டச்சு செய்யக்கூடிய மிகப்பெரிய வார்த்தையாகும்.

* ஆக்ஸ்போர்டு அகராதியில் விசைப்பலகையின் பெயரை குறிக்கும் qwerty என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

* மேல் வரிசையில் உள்ள எழுத்துக் களை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய மிகப்பெரிய வார்த்தை rupturewort என்பதாகும். இது ஒரு மருத்துவ தாவரமாகும்.

* பெரு நாட்டின் ஆங்கில பெயரை (PERU) மட்டுமே தட்டச்சுக்கருவியில் ஒரே வரிசையில் (மேல் வரிசை) அமைந்துள்ள எழுத்துக்களை கொண்டு தட்டச்சு செய்ய முடிந்த ஒரு நாட்டின் பெயராகும், அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான அலாஸ்கா (Alaska) என்ற பெயரை மத்திய வரிசையில் உள்ள எழுத்துகளை மட்டும் கொண்டு தட்டச்சு செய்ய முடியும்.

* இன்று கணினிகள் இருப்பதுபோல 1980-க்கு முன்பு படித்த, வசதி படைத்தவர்கள் வீட்டில் தட்டச்சு கருவிகள் இருந்தன. விஷயங்களை தட்டச்சு செய்து கொடுப்பது கவுரவமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு.

* வேகமாக தட்டச்சு செய்பவர்களால் நிமிடத்திற்கு 100 வார்த்தைகளுக்கு மேல் தட்டச்சு செய்ய முடியும். நிமிடத்திற்கு 150 வார்த்தைகளுக்கு மேல் தட்டச்சு செய்து சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

* 46.30 வினாடிகளில் மூக்கைப் பயன்படுத்தி 103 எழுத்துகளை தட்டச்சு செய்தது கின்னஸ் உலக சாதனையாக பதிவாகி உள்ளது.

* எழுத்தாளர் மார்க்டுவைன், தனது டாம் சாயர் நாவலை 1876-ம் ஆண்டு தட்டச்சில் தட்டச்சு செய்து உருவாக் கினார். இதுவே தட்டச்சில் தயாரான முதல் நாவலாகும்.

* துருக்கியில் தட்டச்சு எந்திரங்களுக்கான அருங்காட்சியகம் உள்ளது. இது 2016-ம் ஆண்டு திறக்கப்பபட்டது. இணையதளங்களில் பழமையான தட்டச்சு எந்திரங்களை ஏலம் விடும் அமைப்புகள் பல உள்ளன.

* குழந்தைகளுக்கென பிரத்தியேக தட்டச்சு கருவிகள் இருந்துள்ளன. தற்போது தட்டச்சு கருவி வடிவில் விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கின்றன.

* கணினிகள் மிகுதியாக புழக்கத்திற்கு வந்துவிட்டதால் 1980க்குப் பின்பு தட்டச்சு கருவிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஒருசில பணிகளுக்காக மட்டும் தட்டச்சு கருவி பயன்படுத்தப் பட்டு வருகிறது.தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பற்றிய படிப்பு உள்ளது  குறிப்பிடத்தக்கது. ப்வளர்ந்த மேலை நாடுகளில் கைதிகள் கணினி பயன்படுத்த அனுமதி இல்லையென்பதால் அவர்கள் தட்டச்சு கருவியை அதிகமாக பயன்படுத்தினர்.

 

error: Content is protected !!