பொங்கல் சிறப்பு பேருந்துகள் : முழு விபரம்!

பொங்கல் சிறப்பு பேருந்துகள் : முழு விபரம்!

பண்டிகை காலங்களில் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வது வழக்கம். இதற்காக பண்டிகை காலங்ககளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து 4,078 பேருந்துகள், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 5,993 பேருந்துகள் இயக்கப்படும்.சென்னையில் சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்வதற்காக 11 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானிடோரியத்தில் 2, பூவிருந்தவல்லியில் ஒரு மையம் செயல்படும். பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிக்கலாம்” என தெரிவித்தார்.

இதை அடுத்து 2021-ஆம் ஆண்டு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை,

“இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல் 13/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 17/01/2021 முதல் 19/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

error: Content is protected !!