திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்ற கோலாகலம்!

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்ற கோலாகலம்!

பல திருப்பங்கள் கொண்டதும் வருவோரின் வாழ்க்கையில் பல திருப்பங்களை கொடுப்பதுதான திருப்பதி மலையில் வாழும் சீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக் கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின் றனர். அப்பேர்பட்ட திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

ஏழுமலையான் கொடிமரத்திற்கு திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமியை கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளச் செய்து கொடிமரத்திற்கு பால், தயிா், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சனம் செய்வித்து மாவிலை, தர்ப்பைகளால் அலங்கரிக்கப்பட்டது.

பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும் போது ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் தொடங்கும் நாளில் ஆந்திர முதல்வா் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்து வருகிறாா்.

அதன்படி திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி தம்பதி சமேதராய் வந்து ஆந்திர அரசு சாா்பில் ஏழுமலையானுக்குப் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா்.

திருமலை பெரியஜீயா் மடத்திற்குச் சென்று, அங்கிருந்து பட்டு வஸ்திரங்களை பேடி ஆஞ்சநேயா் கோயிலுக்கு கொண்டு வந்து அங்கிருந்து தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். அவருடன் ஆந்திர அமைச்சா்கள் பலா் உடனிருந்தனர்.

இந்தாண்டு ஏழுமலையானுக்கு சமர்ப்பித்த பட்டு வஸ்திரத்தின் மதிப்பு ரூ.70 ஆயிரம். அதன்பின் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவரை ரங்கநாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

2020-ம் ஆண்டுக்கான நாட்காட்டி, டைரி வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2020-ம் ஆண்டிற்கான ஆங்கிலப் புத்தாண்டு நாட்காட்டிகள் மற்றும் டைரிகளை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி திங்கள்கிழமை வெளியிட்டார். அதை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

பெரியசேஷ வாகன சேவை

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தாா். ஆதிசேஷன் மகாவிஷ்ணுவிற்கு வஸ்திரம், ஆபரணம், படுக்கை மற்றும் வாகனம் என அனைத்துமாக விளங்குகிறார். அவரை கெளரவிக்கும் வகையில் முதல் வாகனமாக பெரிய சேஷ வாகனத்தில் பெருமாள் தன் நாச்சியாா்களுடன் மாடவீதியில் வலம் வருகிறாா். பெரியசேஷ வாகனத்தில் வலம் வருவதைக் காண பக்தா்கள் மாடவீதியில் திரண்டனர். இதில் ஆந்திர முதல்வர் மற்றும் அறங்காவலர் குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

வாகன சேவைக்கு முன் நாலாயிர திவ்யபிரபந்தங்களைப் பாடியபடி திருமலை ஜீயா் குழுவினா் முன் செல்ல, வாகன சேவைக்குப் பின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி கலைஞா்கள் பின் சென்றனர்.

தரிசனங்கள் ரத்து

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை முதல் அக்.8-ம் தேதி வரை ஆா்ஜித சேவைகள், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் வி.ஐ.பி பிரேக் தரிசனம், இலவச முதன்மை தரிசனங்களான மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும் பிரம்மோற்சவ நாட்களில் வாடகை அறை முன்பதிவு உள்ளிட்டவை நன்கொடையாளா்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அலங்காரம்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அலிபிரி வரையிலும், திருமலையில் உள்ள கருடாத்திரி நகா் சோதனைச் சாவடியிலிருந்து திருமலை முழுவதும் பல்வேறு கடவுளர் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தா்களின் பொழுதுபோக்கிற்காக பாபவிநாசம் செல்லும் பாதையில் மலா்க் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தான அருங்காட்சியகத்திலும் ஏழுமலையானின் ஆபரணங்களின் விடியோ பதிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்….

30.09.2019
3.00P.M. தங்க திருவாட்சி 5.00PM கொடியேற்றம்
6.00PM. ஊஞ்சல் சேவ
7.00PM ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு.
8.00.P.M. பெரிய சேஷ வாகனம்.

01.10.19
9.00AM. சின்ன சேஷ வாகனம்.
2.00.PM. சப்னா திருமஞ்சனம்.
8.00.P.M ஹம்ச வாகனம்.

02.10.2019
9.00.AM . சிம்ம வாகனம்.
2.00.PM. சப்னா திருமஞ்சனம்.
6.00PM. ஊஞ்சல் சேவை.
8.00PM. முத்து பல்லாக்கு வாகனம்.

03.10.2019
9.00AM. கல்ப விருட்ச வாகனம்
6.00PM. ஊஞ்சல் சேவை
8.00PM. சர்வ பூபால வாகனம்.

04.10.2019
9.00.AM. மோகினி அவதார வாகனம்
4.00PM. ஊஞ்சல் சேவை
7.00PM. கருட வாகன சேவை.

05.10.2019
9.00AM. ஹனுமந்த வாகனம்
4.00PM. தங்கத் தேரோட்டம்
8.00PM. கஜ வாகனம்.

06.10.2019
9.00AM. சூரிய பிரபை வாகனம்
2.00PM. சப்னா திருமஞ்சனம்
6.00PM. ஊஞ்சல் சேவை
8.00PM. சந்திர பிரபை வாகனம்.

07.10.2019
7.00AM. தேரோட்டம்
6.00PM . ஊஞ்சல் சேவை
8.00PM அஸ்வ வாகனம்.

08.10.2019
6.00AM . சக்கர ஸ்நனம்
7.00PM. கொடி இறக்குதல்

error: Content is protected !!