ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.4-ம் தேதி வரை அவகாசம்!

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.4-ம் தேதி வரை அவகாசம்!

தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு இரண்டுக் கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டது.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவ.2-ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பிக்க நவ.30-ம் தேதி கடைசி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!