இந்த படத்தை குழந்தைகளுக்கு காட்டவே கூடாது- ஆனா ஒவ்வொரு பெற்றோரும் பார்த்தே ஆக வேண்டும் – – கொட்டேஷன் கேங் டைரக்டர் விவேக் கண்ணன்!

இந்த படத்தை குழந்தைகளுக்கு காட்டவே கூடாது- ஆனா ஒவ்வொரு பெற்றோரும் பார்த்தே ஆக வேண்டும் – – கொட்டேஷன் கேங் டைரக்டர் விவேக் கண்ணன்!

ர்வதேச அளவில் ‘கொட்டேஷன் கேங்’ என்று அழைக்கப்படும் பணத்துக்காக சட்ட விரோத செயல்களைச் செய்யும் குழுக்களின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘QG என்ற பெயரில் தமிழ் திரைப்படம்.` உருவாகியிருக்கிறது.. இந்தப் படத்தை Filminati Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் காயத்ரி சுரேஷ், விவேக் கே.கண்ணன் மற்றும் Sri Gurujothi Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.விவேகானந்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பான் இந்திய படமாக பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்‌ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் என்று பல்வேறு மொழி நடிகர், நடிகையரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாக இருக்கும், இந்தப் படம் பற்றி படத்தின் இயக்குனரான விவேக் கே.கண்ணனிடம் பேசிய போது ”“கொட்டேஷன் கேங்’ என்பது கேரளத்தில் அறியப்படும் குரூப்.. . அது தமிழகத்திலும் இருக்கிறதா..? என்று கேட்டால் தமிழ்நாட்டில் அப்படியான கேங் இல்லைதான். ஆனால், இந்தப் பெயரோடு இல்லாமல் வேறு சில தவறுகள் இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன முக்கியமாக போதை வஸ்துகள் இங்கே கணிசமாகப் புழங்குகின்றன. நம் கருத்துக்கு வராத அந்த போதை உலகத்தில் நம் இளைஞர்கள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகளில் வந்த இந்த போதை சாம்ராஜ்யம் பற்றி அறிந்து, எனக்குத் தெரிந்த சில இளைஞர்கள் வாழ்க்கையை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.. நான் வட சென்னையை சேர்ந்தவன் . எனவே அந்தப் பின்னணியில் கேங்க்ஸ்டர் படம் ஒன்று செய்ய நினைத்தேன். வட சென்னை என்றாலே கேங்க்ஸ்டர் என்றுதான் காட்டவேண்டும் என்று அவசியம் இல்லைதான் . ஆனால் இந்தப் படம் சில நிஜ சம்பவங்களின் உத்வேகத்தில் எழுதப்பட்டது . இந்த கொட்டேஷன் கேங். (QUOTATION GANG ) என்ற பெயரில் உலா வரும் அஞ்சாத கூட்டம் எதைப் பற்றியும் யோசிக்காமல் தமது தேவைக்கான ஆயிரம் இரண்டாயிரத்துக்கு கூட, கொலை செய்பவர்கள் அவர்கள். அவர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் தொழில் . அதைத் தவிர வேறு ஒன்றும் அவர்களுக்கு விசயமில்லை. .இந்த கதைப் போக்கு மட்டுமின்றி, போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் ஓர் இளம்பெண் , அதனால் நொந்து போகும் ஒரு தந்தை என்று ஒரு கதைப் போக்கும் உண்டு . அந்த இளம்பெண் கேரக்டரில் சாரா அர்ஜுன் நடிக்க வைக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவரது தந்தைக்கு அதில் விருப்பம் இல்லை. கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தோம் .

ஆனால் இப்படி பெரிய அளவில் நமக்கு தெரியாத உலகத்தை இப்படி படத்தில் காட்டுவது சரியா… குறிப்பாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் சாரா, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் போல் காட்டுவதால் இது போதைப் பழக்கத்தை இளைஞர்களிடம் ஊக்குவிக்காதா..? என்று கேட்டால் எதனால் இளைஞர்கள் அந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்பதை சொன்னால்தான் அதிலிருந்து எப்படி மீள முடியும் என்பதையும் மீண்டவர்களின் கதை என்ன என்பது பற்றியும் புரிந்து கொள்ள முடியும். இது போதைக்கு அடிமையானால் எத்தனை இன்பம் வரும் என்றெல்லாம் ஊக்குவிக்கும் படமாக நிச்சயமாக இருக்காது. கடைசியில் அதில் சிக்குண்ட சாரா எப்படி மீள்கிறார் என்பது பற்றியும் தன் வாழ்க்கை இதனால் எவ்வளவு கெட்டுப் போனது என்பது பற்றியும் புரிந்து கொள்வதாக வருவதால் இது இளைஞர்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் எச்சரிக்கை படமாகவும் தான் இருக்கும். தந்தைக்கும் மகளுக்குமான பாசமும் இந்த படத்துக்குள் இருக்கிறது.

நான் ஏற்கெனவே சொன்னது போல் சாராவின் பருவத்தில் இருக்கும் பெண்தான் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரது தந்தை அர்ஜுனிடம் பேசிய போது அவர் மகள் இப்படி நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை – மறுக்கவே செய்தார். ஆனால், படத்தின் தன்மைகளை அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்து இதனால் எந்த பாதிப்பும் வராது என்று புரிய வைத்தே அவரை ஒத்துக்கொள்ள வைத்தேன். சின்னப் பெண் சாராவும் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார்.அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதவாறு நான் மிகவும் பொறுப்புடன் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைக்கிறேன். இதே போல் தான் இந்த படத்துக்குள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, விகாஸ் வாரியர் முதலானவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்று இருக்கும் பாத்திரங்களும் கூட இதுவரை நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகத்தைப் பற்றியே இருக்கும். இதைத் தவிர ஒரு காதல் கதையும் உண்டு .

இந்தப் படத்துக்கு வித்தியாசமான இசை வேண்டி டிரம்ஸ் சிவமணியை கமிட் செய்தேன். அவரும் தன்னுடைய எக்ஸ்ட்ராடினரி டேலண்டை யூச் செய்து படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் பிரமாதமாக வழங்கி இருக்கிரார். அதைப்போல் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும். இந்தப் படத்துக்கு புதிய டோனைத் தந்திருக்கிறது..!

இப்போதைக்கு சுருக்கமா சொல்வதானால் எல்லா பேரண்ட்ஸூக்கும் போதை பொருள் பற்றி தெரிய வேண்டும். நிறைய பேருக்கு தெரியவில்லை. படத்தில் அதை பற்றி பேசியிருக்கிறோம். இறுதியில் தப்பு என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். சில பல போதை பழக்கம் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அதனால் போதை பழக்கத்தில் இருக்கும் மற்றொரு பக்கத்தையும் விரிவாக காட்டியிருக்கிறோம். கவனமாகவும் கையாண்டிருக்கிறோம். அதனால் இந்த படத்தை குழந்தைகளுக்கு காட்டவே கூடாது என சொல்லும் நாங்கள்.பெற்றோர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்பதே நோக்கம்~ என்றார்

error: Content is protected !!