நாடு முழுவதும் ‘பொது சிவில் சட்டம்’ கொணர்ந்து பாரதத்தைக் காத்தருள வேண்டும்!

நாடு முழுவதும் ‘பொது சிவில் சட்டம்’ கொணர்ந்து பாரதத்தைக் காத்தருள வேண்டும்!

த்தரகாண்ட் மாநிலப் ‘பொது உரிமையியல் சட்டம்’ அருமை. அதில் சேர்ந்து வாழ்வதற்கு (Living Together) சட்ட விதி போட்டு வைச்சான் பாருங்க ‘ஆப்பு ‘. அங்க நிக்குதுங்க ஹி.ந்துத்.வா.ஆமா, உடனே நொட்டை சொல்லாம முடியாதே என ‘ நடுநிலைகள்’ சலித்துக் கொள்ளலாம். ஏற்கனவே பல நீதிமன்றத் தீர்ப்புகள் ‘சேர்ந்து வாழ்பவர்களுக்கான‘ உரிமைகள் பற்றி விலாவாரியாகப் பேசியிருக்கின்றன. அவையே கூட ஒருவகை சட்ட வரையறைகளே (Jurisprudence). ஆனால் உத்தரகாண்ட் ‘பொது சிவில் சட்டம் ‘, ‘சேர்ந்து வாழ்வதற்கும்’, ‘ பிரிந்து செல்வதற்கும்’, பதிவும் அனுமதியும் வேண்டுமென்ற அபூர்வமானவிதியைக் கொண்டுள்ளது. அதிலும் சரகக் காவல் நிலையத்தில் பதிவு.

அதாவது புதிய விதிகளின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் அதை கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், மறுமணம், விவாகரத்து ஆகியவற்றுக்கு பொது விதிகளை யுசிசி மசோதா கொண்டுள்ளது. திருமண விதிகளை பொருத்தவரை, மணமகனுக்கு உயிருடன் இருக்கும் மனைவியோ அல்லது மணமகளுக்கு உயிருடனுள்ள கணவனோ இருக்கக்கூடாது.

ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதச் சடங்குகளின்படி திருமணம் செய்து கொள்ளலாம். எந்த சடங்காக இருந்தாலும் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த திருமணம் செல்லாது ஆகிய விதிகள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல் விவாகரத்தைப் பொருத்தவரை, தம்பதியரின் திருமணம் மீறிய தொடர்பு, கொடூரமாக நடந்துகொள்ளுதல், திருமணத்துக்குப் பிறகு குறைந்தது 2 ஆண்டுகள் பிரிந்திருத்தல் உள்ளிட்ட காரணங்கள் விவகாரத்துக்கு ஏற்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணமான ஓராண்டுக்குள் விவாகரத்து கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் , திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் பிரிவில், தந்தையின் சகோதரி மகன், மகள், தாயின் சகோதரரின் மகன், மகள் ஆகிய உறவுமுறை இடம்பெற்றுள்ளது. அதாவது அத்தை, மாமன் முறையில் திருமணம் செய்து கொள்வது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நல்லா வெளங்குமில்ல நல்லவர்களே.

சேர்ந்து வாழ்வது என்பது குறித்தப் பல கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவை அதனை சட்ட வரையறைப்படுத்தித் ‘திருமணம் போன்ற ஒழுக்க விதியில் அடைப்பது’ மதவாதமன்றி வேறென்ன? இந்த வாழ்வின் உரிமை ஆதாரமே ‘திருமணம் ‘ என்ற பிடியில் கட்டுண்டு விடாமல் வாழ்வதுதான். பிரிவதற்கான உரிமை அடிப்படையிலான சக வாழ்வு. திருமணமாகாத, வயது வந்த ஆண் – பெண் உறவு ‘திருமணம் ‘ என்ற உறவிற்கு அப்பாற்பட்டது என்ற உரிமை. அவற்றில் பெரும்பான்மை திருமணத்தை நோக்கி நகர்வதும் சாத்தியமே.

இதனைக் ‘காவல் துறை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது கருப்புச் சட்டம் மட்டுமே. சேர்ந்து வாழ்வோரின் மதம் , ஜாதி ஆகியவற்றை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம், அதிலும் காவல் துறையிடம், என்னவிதமான மோசமான, எதிர் மறையான விளைவுகளை உருவாக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஜாதி, மத மறுப்புத் ‘திருமணக் கோரிக்கைகளை‘ காவல் துறை கையாளும் முறை பற்றியும் விளக்க வேண்டிய தேவையில்லை.

எனவே டிமோ அவர்களே! இந்தவிதக் குழப்பமான ‘பொது சிவில் சட்டம்’ ஒன்றைத் தவிர்க்க வேண்டும். மாறாக ஒன்றிய அளவில் , சனாதன – வர்ணாஸ்ரம தர்ம விதிகளின்படி ‘பொது சிவில் சட்டம்’ கொணர்ந்து பாரதத்தைக் காத்தருள வேண்டும்.

வி.எம்.எஸ். சுபகுணராஜன்

error: Content is protected !!