கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முடிவு!

கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முடிவு!

ஐரோப்பிய யூனியனில் மால்டாவில் மட்டுமே கஞ்சா உபயோகத்தில் இருந்த நிலையில் தற்போது ஜெர்மனியில் வந்து விட்டது. நெதர்லாந்தில் சிறிதளவு கஞ்சா காபி கடைகளில் உபயோகிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளிலும் கஞ்சா சிறிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகளில் கஞ்சா மருத்துவ பயன்களுக்காக உபயோகிக்கப்படுகிறது. அதே சமயம் அமெரிக்காவில் தான் பெரும்பாலான மாகாணங்களில் கஞ்சா மருத்துவ பயனுக்காக உபயோகிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கனடா, உருகுவே, பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில்தான் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டு முதல் ஜெர்மனியில் கஞ்சாவை வாங்குவதையும், கஞ்சா தாவரத்தை வளர்ப்பதையும் எளிதாக்கும் மசோதாவுக்கு ஜெர்மன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில் போதைப்பொருள் சட்டத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட உள்ள நிலையில் மசோதா சட்டமானால் ஜெர்மனியில் ஒருவர் 25 கிராம் வரை கஞ்சாவை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும் தனி நபர்கள் வீடுகளில் 3 கஞ்சா செடிகளுக்கு மேல் வளர்க்க அனுமதி கிடையாது. கஞ்சா சட்ட விதிகள் திருத்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும் இது முழு அளவில் சட்டமாக மேலவைகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பாவில் மிகவும் தாராளவாத கஞ்சா சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி மாறும்.

ஆக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஜெர்மன் குடியிருப்பாளர்கள் தலா அதிகபட்சம் 500 உறுப்பினர்களுடன் கூடிய லாப நோக்கமற்ற “கஞ்சா கிளப்பில்” சேர அனுமதிக்கப்படுவார்கள். உறுப்பினர்களின் தனிப்பட்ட நுகர்வுக்காக கஞ்சாவை வளர்க்க கிளப்புகள் அனுமதிக்கப்படும்.

தனிநபர்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் வரை அல்லது மாதத்திற்கு 50 கிராம் வரை வாங்க அனுமதிக்கப்படுவார்கள் – இது 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு 30 கிராம் மட்டுமே. பல கிளப்புகளில் உறுப்பினர் சேர்க்கை அனுமதிக்கப்படாது. கிளப்களின் செலவுகள் உறுப்பினர் கட்டணங்களால் ஈடுசெய்யப்படும், இது உறுப்பினர்கள் எவ்வளவு கஞ்சாவைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறும்.

கறுப்புச் சந்தையை பின்னுக்குத் தள்ளவும், அசுத்தமான பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் குறைக்கவும் அவர்களின் திட்டம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.

error: Content is protected !!