ப்ளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்துடுச்சு!

ப்ளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்துடுச்சு!

ம் நாட்டில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களாக அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. இதில் அமேசான் இந்தியா, முழுவதும் சரக்கு கிடங்குகள், தனிப்பட்ட போக்குவரத்து டெலிவரி சேவைகளை அளித்து வருகிறது. அதே சமயம் ப்ளிப்கார்ட் கூரியர், இ காமர்ஸ் நிறுவனங்களுடனான பங்கீட்டின் பெயரில் டெலிவரி சேவையை தொடர்ந்து வந்தன.

இந்நிலையில் தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனம் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை விரிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி முக்கிய நகரங்களில் ப்ளிப்கார்ட்டுக்காக சரக்கு மற்றும் டெலிவரி சேவை மையங்களை உருவாக்க அதானி லாஜிஸ்டிக்ஸ் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஒருங்கிணைப்பால் ப்ளிப்கார்ட் பொருட்கள் விரைவு டெலிவரி உள்ளிட்ட வசதிகளை பெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஃபிளிப்கார்ட் நிறுவனம் மூன்றாவது தரவுகள் மையத்தை சென்னையிலுள்ள அதானி நிறுவனத்தில் நிறுவ இருக்கிறது. அதேபோல 5 லட்சத்து 34 ஆயிரம் சதுரஅடியில் மும்பையில் அதானி நிறுவனம் தளவாட மையத்தை கட்டமைக்கவுள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் எளிதாக சந்தையை அணுகவும், மக்களுக்கு விரைவாகப் பொருட்களைக் கொண்டுசேர்க்கவும் முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஒப்பந்ததால் நேரடியாக 2,500 பேருக்கும் மறைமுகமாக ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

Related Posts