இன்றைய கூகுள் டூடுல் -ல் இடம்பெற்ற தென் துருவத்தைத் தொட்ட அமுன்ட்சென்!

இன்றைய கூகுள் டூடுல் -ல் இடம்பெற்ற தென் துருவத்தைத் தொட்ட  அமுன்ட்சென்!

நம்ம பூமி பந்தின் எல்லையான தென் துருவத்தில் மனிதன் முதன் முதலில் கால் வைச்ச வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினைத்தான் கூகுள் நிறுவனம் டூடுள் இன்னிக்கு நினைவுப்படுத்தி சிறப்பிச்சிருக்குது. அதாவது மனிதர்கள் வாழமுடியாத அளவு உறைபனிசூழ் கண்டமான அண்டார்டிகாவில்தான் பூமியின் தென்துருவம் அமைந்துள்ளது. அண்டார்டிகா யாருக்கும் சொந்தமானது அல்ல. இங்கே எந்த அரசாங்கமும் கிடையாது என்பதால் இதனை நோ மேன்ஸ் லாண்ட் (No Man’s Land) என்று அழைக்கின்றனர். இங்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதனால் கண்டம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டிற்கு 200 மி.மீ. அளவு மட்டுமே மழைபெய்கிறது. இது ஒரு பனிக்கட்டி பாலைவனம் என்றும் சொல்வார்கள். 98 சதவீதம் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. சுமார் 5000 மீட்டர் (16000 அடி) அளவிற்குத் தரையில் ஆழ்துளையிட்டால்தான் மண்ணைப் பார்க்க முடியும். எப்போதும் தாங்க முடியாத குளிர் மிகுந்த சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.

google dec 14

இந்த அண்டார்டிக்காவின் வெப்பநிலையானது மிகக்குறைந்தபட்சம் மைனஸ் 80 பாகை செல்சியஸ் முதல் மைனஸ் 90 பாகை செல்சியஸ்வரை இருக்கும். அதிகபட்சம் 5 முதல் 15 பாகை செல்சியஸ்வரை இருக்கும். அண்டார்டிகா உலகின் 7ஆவது கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. அண்டார்டிகாவில் பனிப்புயல் 300 கி.மீ. வேகத்தில் வீசும்.

பனிக்காற்று மணிக்கு 1300 கி.மீ. வேகத்தில் வீசும். இப்படி உலக அதிசமாகத் திகழும் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும்.அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சிக் கூடங்களில் சுமார் 1000 பேர் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு 20 விமான தளங்கள், 37 ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. துறைமுகம் கிடையாது. ஸ்காட்- அமுண்ட்சென் மையத்தைத் தலைநகரமாகக் கருதுகின்றனர். கடல் நீல வண்ணம் கொண்ட ஒரு செவ்வகத்தின் மையத்தின் அண்டார்டிகா கண்டத்தின் வடிவம் வெள்ளை நிறத்தில் இருப்பதே இக்கண்டத்தின் கொடியாகும். பாசிகள், கிரில், சீல், மோகேஸ், பென்குயின், ப்ளாங்டன் போன்ற சில உயிரினங்கள் பனிப் பிரதேச சூழலுக்கு ஏற்ப வாழ்கின்றன.

இப்படியான புவியியல் தென் துருவமான அந்த அதிசய உலகை முதன் முதலாக நார்வே நாட்டைச் சேர்ந்த அமுன்ட்சென் என்பவர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு 1911ஆம் ஆண்டு டிசம்பர் 14-ல் அடைந்தது. இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதன் மூலம் பூமியின் எல்லையை தொட்டவர் என்ற பெருமையை அமுன்ட்சென் பெற்றார்.

அங்கு மூன்று நாட்கள் தங்கிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு பின் டிசம்பர் 17ஆம் தேதி அவர் நாடு திரும்பினர். அவருடைய இந்த வீர பயணத்தை போற்றும் வகையில்தான் கூகுள் நிறுவனம் இன்று டூடுள் மூலம் சிறப்பிச்சிருக்குது.

டெயில் பீஸ்:

1910ஆம் ஆண்டில் தனது தென்துருவத்தை நோக்கிய பயணத்தைத் துவக்கப் போவதாக அறிவித்தார். ஜுன் 3, 1910இல் தனது பயணக்குழுவுடன் பயணத்தைத் தொடங்கினார். அப்போது ராபர்ட் ஸ்காட் என்பவரும் தென்துருவத்தை நோக்கிய பயணத்தைத் துவக்கி இருந்தார். அவருக்கு “BEG TO INFORM YOU FROM PROCEDING ANTARTIC – AMUNDSEN” என்கிற தந்தியை அமுன்ட்சென் அனுப்பி வைத்தார்.

      தங்களின் 6 மாத பயணத்திற்குப் பிறகு கிரேட் ஐஸ் பேரியர் (Great Ice Barrier) வழியாக வேல்ஸ் வளைகுடாவை (Bay of Whales) ஜனவரி 14, 1911இல் அடைந்தனர். இங்கு பிரேம்கீம் என்னும் முகாமை அமைத்தார். இவர் தனது கனமான கம்பளி ஆடைகளுக்குப் பதிலாக எஸ்கிமோக்கள் (Eskimo) பயன்படுத்தும் தோல் ஆடையைப் பயன்படுத்தினார்.

      பனிச்சறுக்கு பலகை கொண்ட சக்கரமில்லாத நாய்கள் இழுக்கும் வண்டியைப் பயன்படுத்தினார். தெற்கு நோக்கி 80, 81 மற்றும் 82 பாகை வழியாக தென்துருவத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். தனது பயணத்தின்போது புதிய இறைச்சிக்காக சில நாய்களைக் கொன்றார். பயணத்தின்போது மிக மோசமான தட்பவெப்பநிலை இருந்தது. அமுன்ட்சென்னுடன் சிலர் சண்டை செய்தனர். ஆகவே சிலரை அவர் திருப்பி அனுப்பிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

      இவர் அக்டோபர் 20ஆம் நாள் தென்துருவப் பயணத்தை துவக்கினார். இவர் தன்னுடன் நான்கு துணைவர்களையும், 52 நாய்களையும், அவை இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் (Sledge) என்னும் நான்கு வண்டிகளுடனும் புறப்பட்டார். நான்கு மாதத்திற்குத் தேவையான உணவையும் எடுத்துச் சென்றார். தென்துருவத்தில் 3276 மீட்டர் உயரமுடைய மலை ஒன்றினைக் கண்டு அதற்கு குயின் மௌன்ட் ரேஞ்ச் எனப் பெயரிட்டார். நவம்பர் 21, 1911 அன்று துருவ பீடபூமியை அடைந்தார்.

      அமுன்ட்சென் 1911ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று தென்துருவத்தை வெற்றிகரமாக அடைந்தார். இக்குழு 16 நாய்களுடன் தென்துருவத்தை (90o O’S) அடைந்தனர். அமுன்ட்சென் வெற்றிகரமாகத் தென்துருவத்தை அடைந்து சரித்திரத்தில் இடம்பிடித்தார். அங்கு தங்கி மூன்று நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டார். பின் டிசம்பர் 17ஆம் நாள் அங்கிருந்து திரும்பினார்.

      அமுன்ட்சென் எடை குறைந்த சாதனங்களை எடுத்துச் சென்றார். அதனால் மிகத் திறமையாகத் தென்துருவத்தை அடைந்தார். அவர் துருவத்தில் தடம் வைக்க கனடாவின் வடமேற்கு வழியில் சென்றார். அப்போது எஸ்கிமோக்களுடன் பழகி அவர்கள் அணியும் தளர்ந்த தோலுடைகளை (Fur) உடுத்திப் பனிமண்டலத்தில் உலவிப் பயிற்சி எடுத்துக் கொண்டார். காலில் பூட்டிய பனிச்சறுக்கிகள் எடை குறைவாக இருந்ததால், வெகு நேரம் களைப்படையாமல் வழுக்கிச் செல்ல ஏதுவாய் இருந்தனவாம்.  

Related Posts