விண்வெளியில் இதுவரை எடுக்கப்பட்டதில் மிகத்தெளிவான படம் இதுதான் – நாசா பெருமிதம்= வீடியோ

விண்வெளியில் இதுவரை எடுக்கப்பட்டதில்  மிகத்தெளிவான படம் இதுதான் – நாசா பெருமிதம்= வீடியோ

நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியை பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் மேற்கொண்டு வந்தாலும், அதில் முன்னொடியாக நாசா விளங்குகிறது. இந்நிலையில் விண்வெளியில் உள்ள கோள்கள், மற்ற அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆராய்வதில் நாசா பல காலமாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்காக நாசா முன்னதாக விண்வெளிக்கு அனுப்பிய ஹபிள்ஸ் டெலஸ்கோப் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், நெபுலாக்கள், கேலக்ஸிகளை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் கடந்த சில காலம் முன்னதாக நவீன வசதிகள் கொண்ட புதிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா விண்ணில் நிலைநிறுத்தியது.

பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப், தனது முதல் படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த படத்தை தற்போது அமெரிக்க குடியரசு தலைவர் ஜோ பிடன் வெளியிட்டுள்ளார்.

விண்மீன் கூட்டங்கள், பால்வெளிகளின் திரள்கள் நிறைந்த கலர்புல்லான அந்த புகைப்படம் வான்வெளி அதிசயத்தை கண்டு உலகமே வியந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

error: Content is protected !!