அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 14ம் தேதி வரை நீட்டிப்பு!.

தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்நிலையில் உயர்க்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது. இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன.
உயர்கல்வித் துறை – செய்தி வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@KPonmudiMLA @mp_saminathan pic.twitter.com/PgsgvE3B79
— TN DIPR (@TNDIPRNEWS) September 11, 2023
எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12.09.2023 முதல் 14.09.2023 வரை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in “TNGASA 2023-UG VACANCY” என்ற என்ற தொகுப்பில் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.