வீரத்தின் மகுடம்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்!

வீரத்தின் மகுடம்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்!

சிவாஜி ராஜே போஸ்லே, பொதுவாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் என அழைக்கப்படுபவர், மராட்டிய பேரரசின் அடித்தளத்தை அமைத்தவர். ஒடுக்குமுறை ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்ட ஐக்கிய இந்தியாவை உருவாக்குவதே அவரது கனவாக இருந்தது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் திறமையான நிர்வாக அமைப்புகளுடன், அவர் ஒரு நீதியான பொதுவாட்சியை நிறுவினார். பெண்களை யுத்தத்திற்குப் பயன்படுத்துதல், மதச் சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல், கட்டாய மதமாற்றம் போன்ற அக்கால பழக்கங்களை அவர் தடை செய்தார். பக்தியும் பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக அவர் திகழ்ந்தார்.

மராத்தியில் “கானிமி காவா” எனப்படும் கொரில்லா யுத்த உத்திகளில் நிபுணரான சிவாஜி, வேகமான தாக்குதல்கள் மற்றும் திடீர் பாய்ச்சல்களால் எதிரிகளை வீழ்த்தினார். சிறிய இராணுவத்துடன் பெரும் சக்திகளை எதிர்கொண்ட அவர், இந்த உத்தியால் வெற்றிகளைப் பெற்றார். கடற்கரைப் பகுதிகளை ஆண்ட அவர், தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் தலைமையில் வலிமையான கடற்படையை உருவாக்கினார். போர்ச்சுகீசிய மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களை மடக்கிய அவரது தொலைநோக்கு, “இந்திய கடற்படையின் தந்தை” என்ற பட்டத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. கடல் மற்றும் நிலப்பரப்பு கோட்டைகளை கட்டி பாதுகாத்த அவர், பிரிட்டிஷ் விரிவாக்கத்தை தாமதப்படுத்தினார்.

இரத்தபெருக்கு நோயான இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸால் 1680ல் மறைந்தாலும், அவரது வீரமும் போராட்டமும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகமாக அமைந்தன. இந்திய வரலாற்றின் ஆறு பொற்காலங்களில் ஒன்றாக அவரது ஆட்சி புகழப்படுகிறது.

மகாராஷ்டிராவில் அவரது ஆட்சி வீரமிகுந்ததாகவும் முன்மாதிரியாகவும் போற்றப்படுகிறது. நவீன மராட்டிய தேசத்தின் நிறுவனராகக் கருதப்படும் சிவாஜியை, சிவசேனா போன்ற அமைப்புகள் முன்மாதிரியாகக் கொள்கின்றன. அவரை கௌரவிக்கும் வகையில், மும்பையின் விக்டோரியா டெர்மினஸ் (சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்), சஹார் விமான நிலையம் (சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்), புதுடெல்லியின் பேருந்து நிலையம், ஐஎன்எஸ் சிவாஜி, மற்றும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அருங்காட்சியகம் (சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலியா) ஆகியவை அவரது பெயரால் மறுபெயரிடப்பட்டன.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்