மியான்மர் ராணுவத்தின் மெயின் பக்கம் நீக்கம்: பேஸ்புக் அதிரடி.!!

மியான்மர் ராணுவத்தின்  மெயின் பக்கம் நீக்கம்: பேஸ்புக் அதிரடி.!!

வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட கொள்கைகளை மியான்மர் ராணுவம் மீறியதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியான அந்தப் பக்கத்தை நீக்கி விட்டது.

மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இன்று காலை முதல் மியான்மர் ராணுவத்தின் Main Page காணாமல் போயுள்ளது. மியான்மர் ராணுவம் பேஸ்புக்கில் Tatmadaw True News Page என்ற அதிகாரப்பூர்வமான பெயருடன் இயங்கி வருகிறது. வன்முறையை தூண்டுவதை தடுப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் சில கொள்கைகளை வரையறுத்துள்ளது. அதற்கு எதிராக செயல் பட்டதற்காக மியான்மர் ராணுவத்தின் அதிகாரபூர்வ Main பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி உள்ளது.

இது குறித்து ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எங்கள் உலகளாவிய கொள்கை களுக்கு ஏற்ப, வன்முறையை தூண்டுவதையும், தீங்குகளை ஒருங்கிணைப்பதையும் தடை செய்வதற்காக நாங்கள் வரையறுத்த விதிமுறையை மீண்டும் மீண்டும் மியான்மர் ராணுவம் மீறியுள்ளது. அதனால் நாங்கள் அவர்களின் முக்கிய பக்கத்தை நீக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளது.

error: Content is protected !!