உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம்!

உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம்!

பாசிசம், மத அரசியல், எதேச்சிகாரம், பிற்போக்கு எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதற்கான மாற்றாக திமுக வை அது வரை ஆதரிக்காத பலர் விஜயகாந்த் போல் சுவற்றில் கால் வைத்து அந்தர் பல்டி அடித்து ஆதரிக்க ஆரம்பித்தது தெரிந்த விஷயமே. அதில் இருந்து முக்கிய சில தொழில், நிதி, கல்வி என பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்கள் இன்னும் தீவிரமாய் செயல்பாடுடையவர்களை கவனித்து வருகிறேன். தொடர்ந்து கூட்டங்கள், சந்திப்புகள், வேலைகள், கட்சி மாநாடுகள் என தினம் செய்தியில் அல்லது சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றனர். இன்றைய பதிவில் கல்வி அமைச்சர் தன் சோர்வை மீறி வலம் வந்தாலும் கண்கள் காட்டித்தருகிறது.

அவர் என இல்லை. பலர் சி எம் போலவே அளவுக்கு அதிகமாக உழைப்பது, பயணம் செய்வது, தன் துறைகள், மக்கள் சார்ந்து செயல்படுவது என இடைவிடாமல் நேரமின்றி ஓடாடுவதை கவனிக்கிறேன். இது டிவிட்டர், ஃபேஸ்புக் ல் ஸ்காராலில் கவனிக்கும் பொழுதே தென்படுகிறது. அதிக வேலைப்பளு என்றே என் கண்ணுக்கு தெரிகிறது.

உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம். நல் உணவு, நீர் போல நல்ல ஓய்வும் சரியான தூக்கமும் மிக மிக அவசியம். பயணம் இருப்பின் அதன் பின் ஓய்வு எடுத்தப்பின் பணிக்கு திரும்ப வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தை கவனிக்கலாம். நீண்ட வருடங்கள் எனில்?

எனவே எப்பொழுதும் , அட்லீஸ்ட் பத்து நாட்களுக்கு ஒரு நாளாவது குடும்பத்துக்கு தனிமையில் ஒதுக்க வேண்டும். இது அமைச்சர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் மட்டுமில்லை. அவர்களுடன் பயணிக்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கும் பொருந்தும்.

இன்றைய பல நோய்களுக்கு முக்கிய காரணி ஸ்டெரெஸ். பி.பி முதல் இதய சிக்கல் வரை காரணி. அவ்வப்பொழுது ஓய்வு, நல் தூக்கம் மிக அவசியம் அனைவருக்கும். முக்கியமாய் முதல்வருக்கும். நல் நட்புகள், குடும்பத்துடன் தனிமை நிமிடங்களும் சிறிதளாவது தேவை.

ஏன் எனில் 2024 ல் உங்களை நம்பியுள்ளோம். அதன் பின்பும். சித்திரம் அழகாய் அமைய சுவர் பலமானதாக இருக்க வேண்டும்.உழைப்போம். நெடும் காலம் உங்கள் உழைப்பு தேவைப்படும் என்கிற அக்கறையில் இப்பதிவு.

சரியாக புரிந்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலும். சுகாதார துறை/ மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் அனைவரின் நலத்திலும் கவனம் கொள்வார் என்ற நம்பிக்கையில்…

மக்கள் பணி செய்பவர்களின் உடல் நலத்தின் / மனநலத்தின் மீது அக்கறையுள்ள பதிவர்.

கிருத்திகாதரன்

error: Content is protected !!