தென்காசி: கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை-ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

தென்காசி: கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை-ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயில் சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு வந்து சிவனை வழிபட்டால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காசி விஸ்வநாதர் கோவிலின் சிறப்பான கட்டமைப்பின் மூலம்மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே தரிசிக்க முடியும். இந்த கோயிலை பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் (1422-63) தோற்றுவிக்கப்பட்டதாகும் என்று சொல்லப்படுகிறது. வடகாசியில் உள்ள கோயில் பழுதடைத்துவிட்டதால் தென்காசியில் ஒரு கோயில் எழுப்ப வேண்டுமென்று இறைவன் பாண்டியனின் கனவில் தோன்றி கேட்டுக் கொண்டதால் இந்தக் கோயிலைக் கட்டினேன் என்ற செய்தி அம்மனுடைய கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.சுவாமி கோயில், முருகன் கோயில், அம்மை உலகம்மன் கோயில் என்ற மூன்று பிரிவுளாக கோவில்களும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.

கோயிலிற்கும் கோபுரத்திற்கும் இடையில் பரந்த வெளிப் பரப்பு பொதிகை மலையிலிருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோயிலிற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கில் இருந்து கிழக்காக வீசுகிறது. கோயிலை நோக்கிச் செல்லும்போது, காற்று இல்லாமலேயே காற்று சுழன்று வீசுவது போல் ஓர் அனுபவம் ஏற்படுகிறது. இத்தனை சிறப்பு கூறிய காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மன் சன்னதி மண்டபத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. யாக வேள்வியை சைவ சமய ஆதீனங்கள் துவக்கி வைத்தனர்.

இன்நிலையில் தென்காசி சேர்ந்த நம்பிராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் அமர்வில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அதில், “தென்காசியை காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது.. இதனால் கோயிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் பழமையான கோயிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது.விசாரணை செய்த நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.மேலும் திருப்பணிகள் குறித்து சென்னை IIT குழு, ,மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க  ஐகோர்ட் கிளை உத்தரவு.

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!